வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டு வர இருக்கும் அப்டேட்டுகளை முன்கூட்டியே லீக் செய்யும் டெக் டிராக்கரான WABetaInfo தளம், வாட்ஸ் அப் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கும் அம்சத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி வாட்ஸ்அப்பில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் டிஸ்அப்பியரிங் மெசேஜூகளை சேமித்து வைக்கும் அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது. அதாவது, அனுப்பப்படும் மெசேஜூகள் பார்த்தவுடன் அல்லது குறிப்பிட்ட காலத்துக்குள் தானாக அழியும் வகையிலான அம்சம் வாட்ஸ்அப்பில் நடைமுறையில் உள்ளது.
மேலும் படிக்க | டிவிட்டர் சிஇஓ பதவி நீக்கம் செய்யப்பட்டால் எவ்வளவு தொகை கிடைக்கும்?
இது தனிநபர்களின் சாட் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் இருந்தது. தற்போது இந்த அம்சத்துக்கு நேரெதிரான அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது வாட்ஸ்அப் நிறுவனம். அதாவது டிஸ்அப்பியரிங் என்ப்படும் மறைந்துபோகும் செய்திகளை யூசர்கள் விரும்பினால் சேமித்து வைத்துக் கொள்ளும் புதிய செட்டிங்ஸை வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டு வர உள்ளது. மறைந்துபோகாமல் இருக்கச் செய்ய முடியும். ஆன்டிராய்டு பீட்டாவில் இந்த சோதனையை மேற்கொண்டிருக்கும் வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது ஆப்பிள் யூசர்கள் பயன்படுத்தும், WhatsApp iOS பீட்டாவிலும் சோதனையைத் தொடங்கியுள்ளது.
அந்த புதிய ஆப்சனில் செய்தியை வைக்க விரும்பும் அம்சம் இருக்கும். அதனை ஆன் செய்திருந்தால் மட்டுமே மறைந்துபோகும் செய்தி, அவ்வாறு டிஸ்அப்பியர் ஆகாமல் தடுக்க முடியும். தனிநபர்களின் சாட்களுக்கு பாதுகாப்பு உத்திரவாதத்தை வழங்கிய டிஸ்அப்பியரிங் ஆப்சனுக்கு நேர் எதிராக கொண்டு வரப்படும் புதிய ஆப்சன், சர்ச்சைக்குரியதாக மாறவும் வாய்ப்புகள் உள்ளன.
கடந்தவாரம் புதிய அம்சத்தை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ஒரு குழு உரையாடலில் 32 பேர் வரை பங்கேற்கும் அம்சத்தை கொண்டு வந்தது. 2 ஜிபி வரையிலான பைல்களை அனுப்பிக் கொள்ளும் அம்சத்தையும் அறிமுகப்படுத்தியது. அடுத்ததாக இந்த அம்சம் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
மேலும் படிக்க | டிரைவர்கள் இல்லா கார்களை இந்தியாவில் அறிமுகம் - ஓலா அதிரடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR