Bajaj CNG Bike : 102 கிலோ மீட்டர் மைலேஜ் பைக் வந்தாச்சு.. ஆட்டமே இனி தான் ஆரம்பம்

பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக்கின் விலை 95,000 (எக்ஸ்-ஷோரூம்) ரூபாயில் தொடங்கி 1.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ரூபாய் விலை வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கை  இன்று முதல் முன்பதிவு செய்யலாம். 

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 5, 2024, 07:04 PM IST
  • 102 கிமீ மைலேஜ் கொடுக்கும் பைக்
  • சிங்கிள் சார்ஜில் 303 கிமீ பயணிக்கலாம்
  • 95 ஆயிரம் ரூபாய் ஆரம்ப விலை நிர்ணம்
Bajaj CNG Bike : 102 கிலோ மீட்டர் மைலேஜ் பைக் வந்தாச்சு.. ஆட்டமே இனி தான் ஆரம்பம் title=

பல்சர் உள்ளிட்ட பைக்குகளின்  விலையிலேயே மின்சார பைக்கை அறிமுகப்படுத்தியிருக்கிறது பஜாஜ். விலையும் மற்ற பட்ஜெட் பைக்குகளின் விலையே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 125 சிசி பைக், சிஎன்ஜி காரைப் போலவே பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இரண்டிலும் இயங்கும். இதனால் இந்த பைக்குக்கான தினசரி செலவும் உரிமையாளர்களுக்கு குறையும். முதல்கட்டமாக பஜாஜ் 125 சிஎன்ஜி பைக் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் விற்பனைக்கு வருகிறது. அங்கு கிடைக்கும் ரிவ்யூக்களைப் பொறுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய பஜாஜ் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

மேலும் படிக்க | இந்த ஜூலையில் இந்தியாவில் களமிறங்கும் புத்தும் புதிய பைக் மற்றும் கார்கள்...

பஜாஜ் ஃப்ரீடம் 125 டூயல் டேங்க்

பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக்கின் செலவைக் குறைக்க விரும்புபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. CNG ஆப்சனில் இயங்கும் இந்த பைக் பெட்ரோல் விலையை விட சுமார் 50% குறைவாக இருக்கும். தேவைப்படும்போது பெட்ரோலைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், சிறிய பெட்ரோல் டேங்கும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. வலது ஹேண்டில் பாரில் ஒரு சுவிட்ச் உள்ளது, அதை அழுத்துவதன் மூலம் பெட்ரோல், சிஎன்ஜிக்கு பைக்கை மாற்றிக் கொள்ளலாம். பெட்ரோல் டேங்கிற்கு கீழே CNG டேங்க் வைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் டேங்கின் கொள்ளளவு 2 லிட்டர். சிஎன்ஜி டேங்கில் 2 கிலோ எரிவாயு நிரப்ப முடியும்.

பஜாஜ் ஃப்ரீடம் 125 மைலேஜ்

ஃப்ரீடம் 125 சிஎன்ஜியை ஒருமுறை நிரப்பினால் 213 கிலோமீட்டர்கள் வரையிலும், பெட்ரோல் டேங்கில் மூலம் 117 கிலோமீட்டர்கள் என மொத்தம் 330 கிலோமீட்டர்கள் வரை ஓடலாம் என்று பஜாஜ் கூறுகிறது. சிஎன்ஜியில் இயங்கும் போது இதன் மைலேஜ் ஒரு கிலோவுக்கு 102 கிலோமீட்டர் கிடைக்குமாம். பெட்ரோலில் இயங்கும் போது லிட்டருக்கு 64 கிலோமீட்டர் கிடைக்கும் என தெரிவித்துள்ளது. 

பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக் சிறப்பம்சங்கள்

பஜாஜ் ஃப்ரீடம் 125 ஆனது ஏர் கூல்டு செய்யப்பட்ட 125 சிசி இன்ஜினைக் கொண்டுள்ளது. இந்த எஞ்சின் 9.4 பிஎச்பி பவரையும், 9.7 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. இந்த பைக்கின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனும் உள்ளது. பிரேக்கிங்கிற்கு முன்புறத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் டிரம் பிரேக்கும் உள்ளது. இந்த பைக்கில் 17 இன்ச் அலாய் வீல்கள் உள்ளன. ஃப்ரீடம் 125 பைக்குக்கு நேரடி போட்டி இல்லை என்றாலும், சந்தையில் உள்ள மற்ற 125 சிசி பைக்குகளுடன் இது போட்டியிடும்.  ஹோண்டா ஷைன் 125, ஹீரோ கிளாமர், டிவிஎஸ் ரைடர் 125 மற்றும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் ஆகிய பைக்குகளின் விற்பனைக்கு இந்த பைக் சவாலாக இருக்கலாம். 

மேலும் படிக்க | Jio vs Airtel vs Vi: 1ஜிபி டேட்டா இப்போ இவ்வளவா? எதில் விலை குறைவு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News