கேரளாவில் சட்டப்படி நடைபெற்ற முதல் திருநங்கை திருமணம்!

கேரளாவில் சட்டப்படி இசான் ஷான் மற்றும் சூர்யா ஆகியோருக்கு முதல் திருநங்கை திருமணம் நடைபெற்றது!

Last Updated : May 10, 2018, 01:13 PM IST
கேரளாவில் சட்டப்படி நடைபெற்ற முதல் திருநங்கை திருமணம்! title=
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் இஷான். பெண்ணாக பிறந்த இவர் தனக்குள் இருந்த ஆண் உணர்வால் திருநம்பியாக மாறியவர். அதனைப்போல கேரளாவின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் துணை நடிகையாக இருப்பவர் சூர்யா வினோத். தனக்குள் பூத்த பெண் உணர்வால் திருநங்கையாக மாறியவர். 
 
பொதுவாகவே மூன்றாம் பாலினத்தவரை ஒதுக்கி தள்ளும் இந்த சமூகத்தில் இஷானும்- சூர்யாவும் ஜாதி மதங்களை கடந்து, இந்த சமூகம் ஏற்படுத்தி வைத்துள்ள கட்டமைப்புகளை உடைத்து காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். 
 
இந்த ஜோடி தான் கேரளாவின் முதல் மாற்று பாலின தம்பதியராகும் பெயரினை பெற்றுள்ளனர். முன்னதாக சூர்யா திருநங்கை என்னும் மூன்றாம் பாலினத்தில் தனி வாக்காளர் அடையாள அட்டை பெற்று அனைவரது கவனத்தினையும் ஈர்த்தவர்.
 
மூன்றாம் பாலினத்வருக்கான உரிமைகள் கேரளாவில் மறுக்கப்படவில்லை என்ற பிம்பம் இதன் மூலம் உடைந்தாலும், இன்றும் அங்கு மூன்றாம் பாலினத்தவர்கள் துயரத்தினை அனுபவித்து தான் வருகின்றனர். இந்நிலையில் தான் தன்னுடைய திருமணைத்தை சட்ட ரீதியாக நடத்த வேண்டும் என தீர்மாணித்துள்ளது இந்த ஜோடிக்கு. முன்னதாக, Special Marriage Act சட்டத்தின் கீழ் சட்டரீதியாக திருமணம் செய்துக்கொள்ளும் உரிமை வழங்கப்பட்டது.
 
இதையடுத்து, விரைவிலேயே இவர்களது திருமணம் நடைப்பெறவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, இன்று இவர்களது திருமணம் சட்டபடி நடைபெற்றது.  இது கேரளாவில் சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ள முதல் திருநங்கை- திருநம்பி திருமணம் என்னும் பெயரினையும் பெற்றுள்ளது. 
 
இந்நிலையில், இதுகுறித்து இஷானும் சூர்யாவும் பேசும்போது...! 

 எங்கள் திருமணத்திற்கு எந்த பிரச்னையும் இல்லை. இருவர் வீட்டின் சம்மதம் மற்றும் உறவினர்கள் என அனைவரின் மத்தியிலும் தான் எங்கள் திருமணம் நடந்து முடிந்துள்ளது. எங்கள் இருவரின் குடும்பத்தினரும் எங்களை புரிந்துக் கொண்டனர். அதனால் திருமணத்திலும் சிக்கல் இல்லை. 

 

 
மேலும், அந்த தம்பதியினர் எங்கள் திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது என்றும் பெருமிதம் கொண்டனர். 

Trending News