இரண்டாம் வகுப்பு வரையிலான CBSE மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் எதுவும் கொடுக்கக்கூடாது என தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழுமம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வழக்கறிஞர் புருஷோத்தமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்....!
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழுவின் பாடத்திட்ட விதிகளை மீறி சிபிஎஸ்இ பள்ளிகள் பாடங்களை போதிக்கின்றன
இதனால் குழந்தைகள் தங்களது எடையைக்காட்டிலும் கூடுதல் சுமையாக புத்தகங்களை சுமந்து செல்வதால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து, குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு, இரண்டாம் வகுப்பு வரையிலான சிபிஎஸ்இ மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் எதுவும் கொடுக்கக்கூடாது என தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழுமம் பதில் மனுவில் தெரிவித்துள்ளது.
இதனை நாடு முழுவதும் உள்ள 18 ஆயிரம் சிபிஎஸ்இ பள்ளிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழு செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.