கனவில் பார்த்த அதே காட்சி நிஜத்தில் நடந்தது: மகிழ்ச்சியில் அனுஷ்கா!

பாகுபலி-2 படத்துக்குப் பிறகு அனுஷ்கா தற்போது 'பாகமதி' என்னும் படத்திலும் நடித்துள்ளார். இந்த படமும் இவருக்கு நல்ல பெயரை கொடுத்து விட்டது.

Last Updated : Mar 19, 2018, 06:23 PM IST
கனவில் பார்த்த அதே காட்சி நிஜத்தில் நடந்தது: மகிழ்ச்சியில் அனுஷ்கா! title=

நடிகை அனுஷ்கா பாகுபலி, அருந்ததி, இஞ்சி இடுப்பழகி, ருத்ரமாதேவி உட்பட பல பெண்களை மையமாக கொண்ட பல படங்களில் நடித்தவர். ஏறத்தாழ 400 கோடி ரூபாய் இந்தப் படங்கள் மூலம் வசூல் ஆனது.

பாகுபலி-2 படத்துக்குப் பிறகு அனுஷ்கா தற்போது 'பாகமதி' என்னும் படத்திலும் நடித்துள்ளார். இந்த படமும் இவருக்கு நல்ல பெயரை கொடுத்து விட்டது.

ஆனால், பிரபாஸ் மற்றும் அனுஷ்கா திருமணம் செய்து கொள்வதாக பல வதந்திகள் கிளம்பி வந்த வண்ணம் உள்ளது.

பத்திரிகையையாளர்கள் அனுஷ்காவிடம் இது பற்றி தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அவரும் இல்லை என மறுத்து வருகிறார். 

தனது திருமணம் குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது:- எனது திருமணத்தை நான் தள்ளிப்போடவில்லை. எனக்கு குழந்தைகள் பிடிக்கும். எனவே விரைவில் திருமணம் செய்துகொள்வேன். 

அதற்காக உடனடியாக திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆக வேண்டிய கட்டாயம் இருப்பதாக அர்த்தம் இல்லை. திருமணம் பற்றி முடிவு எடுத்ததும் அதைப் பற்றி முறையாக அறிவிப்பேன் என்றாராம்.

இந்நிலையில் அவருக்கு அடுத்தடுத்து படங்கள் ஏதும் இல்லை. காரணம் அவர் நல்ல கதைகளை மட்டுமே எதிர்பார்ப்பது தானாம்.

நடிகை அனுஷ்கா சிறுவயதில் புராணம், சரித்திர கதைகளை அதிகம் படிப்பாராம். கற்பனை கதைகளை கூட அவருக்கு மிகவும் பிடிக்குமாம். இதனால் எப்போதும் கற்பனை உலகிலேயே மிதப்பாராம். அதில் கோட்டையை அரசாளும் ராணியாக இருப்பது போல கனவு கண்டாராம். பின்னர் அதை பாகுபலி படத்தின் மூலம் நிரூபித்து காட்டியும் உள்ளார்.

Trending News