தமிழ் போன்ற மொழிப்பாடங்களில் தாள் ஒன்று, தாள் இரண்டு என இரு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.
இதனால் 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்கள் மொழிப்பாடங்களுக்கு 4 தேர்வுகளை சேர்த்து மொத்தம் 8 தேர்வுகள் எழுதுகின்றனர்.
மாணவர்களின் இந்த தேர்வுச் சுமையை குறைப்பதற்காக தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதை மாற்ற இனி 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான மொழித் தேர்வு ஒரே தாளாக மாற்ற தமிழக பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
இதேபோன்று வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியல் ஆகிய இரண்டு பாடங்களையும் ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன் 4 முக்கிய பாடங்களிண் எண்ணிக்கையை மூன்றாக குறைக்கவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது போல தேர்வுகளை குறைக்கும் ஆலோசனைக் கூட்டங்களை மாநிலம் முழுவதும் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.