ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இரண்டு ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தேசிய நினைவகத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன் தினம் திறந்து வைத்தார்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு, டி.ஆர்.டி.ஓ., எனும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், பேக்கரும்பில், 16.5 கோடி ரூபாயில், நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தேசிய நினைவகத்தை பிரதமர் மோடி நேற்று முன் தினம் திறந்து வைத்தார். அந்த மணி மண்டபத்தில் வீணை மீட்டுவது போன்ற கலாம் சிலை வைக்கப்பட்டு இருந்தது. சிலை முன்பு பகவத் கீதை நூலும் இருந்தது.
25-ம் தேதி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ராம்நாத் கோவிந்த் பதவியேற்கவுள்ள நிலையில், தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாளை ஓய்வு பெறுகிறார்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி நம் நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அவர்களது ஆயுள்காலம் வரை அவர்கள் விரும்பும் பகுதிகளில் வாடகை, மின்சாரம் மற்றும் குடீநீர் கட்டணம் இல்லாமல் வீடு வழங்கப்பட வேண்டும். இதற்காக, டெல்லி ராஜாஜி மார்க் பகுதியில் உள்ள பங்களாவில் பிரணாப் முகர்ஜி நாளை குடியேறுகிறார்.
‘டாக்டர் கலாம் ஸ்மிருதி சர்வதேச அறிவியல் மற்றும் விண்வெளி அருங்காட்சியகம்’ இன்று (வியாழக்கிழமை) திறக்கப்படவுள்ளது.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும், இந்தியாவின் விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் நினைவாக, கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் புதிய அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்துக்கு ‘டாக்டர் கலாம் ஸ்மிருதி சர்வதேச அறிவியல் மற்றும் விண்வெளி அருங்காட்சியகம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் இன்று (வியாழக்கிழமை) திறக்கப்படவுள்ளது.
இஸ்ரோவின் முன்னாள் தலைவர் டாக்டர் கே.ராதாகிருஷ்ணன் இந்த அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார்.
1931 ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ராமேஸ்வரத்தில் பிறந்தார் இவரது இயற் பெயர் ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம். இவர் இந்தியாவின் 11-வது குடியரசு தலைவராகவும் மற்றும் விண்வெளி பொறியாளராகவும் பணியாற்றினார். அவரது பிறந்த தினமான இன்று இளைஞர்களின் எழுச்சி தினமாக கொண்டாடப்படுகிறது.
டாக்டர் ஏபிஜே அப்துல்கலாமின் 85 வது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒவ்வொரு இந்தியனின் சிந்தனையையும் கவர்ந்தவர் என்று பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
அணுவிஞ்ஞானி, இந்திய ஏவுகணை நாயகன் என்று புகழப்பட்ட அப்துல் கலாம் 2-வது முறையாகவும் அவர் ஜனாதிபதியாக வர வேண்டும் என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் இருந்தது. ஆனால் அரசியல் சூழ்நிலை காரணமாக அவர் பின்வாங்கியது தெரியும். ஆனால் அவர் போட்டியிட விரும்பினார் என்பது அவர் எழுதிய கடிதத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.