அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் டிவிட்டர் கணக்கு நேற்று மாலை 7 மணிக்கு சுமார் 11 நிமிடங்களுக்கு தற்காலிகமாக செயலிழந்தது. ஆனால், உடனடியாக கணக்கு மீட்டெடுக்கப்பட்டதாக டிவிட்டர் நிறுவனம் கூறியுள்ளது.
@realdonaldtrump என்னும் டொனால்ட் டிரம்பின் கணக்கு, "ஒரு டிவிட்டர் பணியாளரின் மனித பிழை காரணமாக கவனக்குறைவாக செயலிழந்தது" என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை டிவிட்டரில் மொத்தம் 41.7 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். நேற்று மாலை டிரம்பின் டிவிட்டர் கணக்கு செயலிழந்தது அதிரிச்சி ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் லாரியை வேகமாக ஊற்றி வந்து பொதுமக்களின் மீது மோதி தாக்குதல் ஏற்படுத்திய சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
லாரியை வேகமாக ஊற்றி வந்து பொதுமக்களின் மீது மோதி தாக்குதல் நடத்தியதோடு, ஓட்டுனர் லாரியை விட்டு கீழே இறங்கி, அங்கிருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் மீது துப்பாக்கியால் சுட தொடங்கினான். அதில் ஒரு போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. கடைசியாக போலீசார், அந்த ஓட்டுனரை கைது செய்தனர். அந்த ஓட்டுனருக்கு வயது 29. அவனிடம் இருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் அவனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாகிஸ்தானின் செயல்பாடுகளை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்:-
பயங்கரவாத இயங்கங்கள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கும் பாகிஸ்தானின் செயல்பாடுகள் குறித்து விமர்சிக்காமல் அமைதியாக இருக்க முடியாது.
ஆப்கானிஸ்தானில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றினால், பாகிஸ்தானுக்கு நன்மைகள் கிட்டும். ஆனால், பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்து வருவதால் ஆப்கானிஸ்தான் பெரிய இழப்புகளைச் சந்தித்துவருகிறது.
ரஷ்யா மீது பொருளாதார தடைவிதிக்கும் மசோதாவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்து உள்ளார்.
கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு அதிகம் இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து அமெரிக்காவின் செனட் சபை கமிட்டி நடத்திய விசாரணையில் உறுதியானது.
இந்நிலையில் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவிற்கு அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துக் கையெழுத்திட்டுள்ளார்.
அமெரிக்க அதிபராக பதவியேற்றய டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை சேர்க்கும் திட்டத்தை முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கொண்டு வந்தார். ஆனால் தற்போது இந்த திட்டத்தை அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பின் அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேருவது வரும் ஜனவரி 1-ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேர அனுமதி கிடையாது என்று அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று வடகொரியா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
வடகொரியாவால் கைது செய்யப்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்ட பிறகு விடுவிக்கப்பட்ட அமெரிக்க மாணவர் ஒட்டோ வாரம்பியர் உயிரிழந்தார்.
வடகொரியாவில் சித்ரவதைச் செய்யப்பட்டதால் தான் மாணவர் மரணமடைந்தார் எனா அமெரிக்க கூறியது. இந்நிலையில், வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில், பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று வடகொரியா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு, டிரம்ப் முதல் வெளிநாட்டுச் சுற்றுப்பயணமாக சனிக்கிழமை சவுதி அரேபியா புறப்பட்டுச் சென்றார்.
அமெரிக்க அதிபர்களிலேயே பதவியேற்ற பிறகு முதல் சர்வதேச பயணமாக இஸ்லாமிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதல் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆவார்.
கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் அலெப்போ நகரை சேர்ந்த 7 வயது சிறுமி பானா அலாபெத் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் இவள் தனது குடும்பத்துடன் அலெப்போவில் இருந்து வெளியேறினாள். தற்போது துருக்கியில் அகதியாக தங்கி இருக்கிறாள்.
இவள் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்று இருக்கும் டொனால்டு டிரம்புக்கு உருக்கமான கடிதம் எழுதி இருக்கிறாள். அதில்:-
வாஷிங்டன்: அமெரிக்காவின் 45-வது அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டார். ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளின்டன் தோல்வி அடைந்தார். அமெரிக்காவின் 45-வது அதிபர் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. குடியரசுக்கட்சி சார்பில் பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும் போட்டியிட்டார்கள். மொத்தம் 50 மாகாணத்தில் உள்ள 538 பிரதிநிதிகள் ஓட்டுகளில் 270 ஓட்டுகளை பெறும் நபர் அதிபராக தேர்வு செய்யப்படுவார்.
அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவி ஏற்க உள்ளார். டியரசு அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்வானார். பல்வேறு கருத்துக்கணிப்புகளை முறியடித்து குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று உள்ளார்.
அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவி ஏற்க உள்ளார். டியரசு அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்வானார். பல்வேறு கருத்துக்கணிப்புகளை முறியடித்து குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று உள்ளார்.
உலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று முடிந்தது. வாக்களிப்பு முடிவடைந்த ஒரு மணி நேரத்துக்குள் அந்த மாநிலத்துக்கான முடிவுகள் அறிவிக்கப்படும்.
நவம்பர் 8-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவி காலம் முடிவடைய இன்னும் 100 நாட்களே உள்ளது. இந்நிலையில் ஒபாமாவின் பதவிக்கால முடிவடைவதற்குள் புதிய அதிபர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.