ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று 30 கழிவு சுத்திகரிப்பு இயந்திரங்களின் முன்னோட்டத்தினை துவங்கி வைத்தார்.
இந்த 30 இயந்திரங்களில் கழிவு சேகரிப்பு லாரிகள், மரம் கத்தரித்து இயந்திரங்கள், சாலை துப்புரவு மற்றும் இதர துப்புரவு இயந்திரங்கள் என மொத்தம் 30 இயந்திரங்கள் அடங்கும்.
Andhra Pradesh Chief Minister N Chandrababu Naidu flagged off 30 solid waste management machines in Amaravati pic.twitter.com/WJBfxIzuhu
உணவு ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை முடிவுகளின்படி, தமிழகத்தில் எங்கும் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 7ம் தேதி நடந்த சோதனையில் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்திலும் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக தகவல்கள் வெளியானது.
தமிழகம் முழுவதும் 300 குழுக்கள் அமைக்கப்பட்டு கடைகளில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்டறிய அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சோதனையின் போது, அரிசிகளின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
கடந்த 7ம் தேதி நடந்த சோதனையில் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்திலும் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக தகவல்கள் வெளியானது.
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பிளாஸ்டிக் அரிசி குறித்த செய்திகள் வெளியாகியது. ஆந்திரா, தெலுங்கானா, மற்றும் உத்தரகாண்டிவில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்துக்கு பிளாஸ்டிக் அரிசி வராமல் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அமைச்சர் காமராஜ் கூறியதாவது:-
தமிழகத்தில் நுகர்வோர் தேவைக்கேற்ப 3 லட்சத்து 18 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி ரேஷன் கடைகள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் அரிசி விலையும் கட்டுக்குள் இருக்கிறது.
ஆந்திரா வழியாக ஒடிசாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவு ரயில் ஒன்று, திடீரென தடம்புரண்டதில், 26 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அங்குள்ள குனேரு ரயில்நிலையம் அருகிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது ஒடிசாவை ஒட்டிய ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இவ்வழியாக, நேற்று நள்ளிரவு ஜக்தால்புர் புவனேஸ்வர் விரைவு ரயில் சென்றுகொண்டிருந்தது.
திடீரென ரயில் என்ஜீன், சரக்குப் பெட்டி, ஏசி பயணிகள் பெட்டி, ஜெனரல் பெட்டிகள் உள்ளிட்டவை தடம்புரண்டன. இதில், 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தமிழகத்திற்கு 2.5 டி.எம்.சி கிருஷ்ணா நீரை வழங்க ஆந்திரா ஒப்புதல்
2.5 டி.எம்.சி அளவு கிருஷ்ணா நதி நீரை வழங்க ஆந்திர அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இன்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் 2.5 டி.எம்.சி அளவு கிருஷ்ணா நதி நீரை தமிழகத்திற்கு அளிப்பதாக ஆந்திர அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இறந்த பசுவின் தோலை அகற்றியதற்காக இரண்டு தலித் சகோதரர்களை தென்னை மரத்தில் கட்டிவைத்த கொடூர சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது. குஜரத்தில் இதே போன்ற சம்பவம் நடைபெற்று மிகப்பெரும் அதிர்வலைகளை நாடு முழுவதும் ஏற்படுத்தி ஒரு சில வாரங்களே ஆகியிருந்த நிலையில் மீண்டும் இதேபோன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.