முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடன் கடந்த 30 வருடமாக தங்கியிருந்த சசிகலா, எம்.ஜி.ஆர். உருவாக்கிய அதிமுகவின் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்ததோடு தற்போது அதிமுக சட்டசபைத் தலைவராக சசிகலாவை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவராக சசிகலா ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் கூடிய விரைவில் தமிழக முதல் அமைச்சராக பதவியேற்க உள்ளார்.
தமிழக முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவையடுத்து அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டன. கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றார். அத்துடன் அவர் முதல்வர் ஆக வேண்டும் என்றும் அக்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை இன்று கூட்டியிருக்கிறார் சசிகலா. எனவே, சசிகலாவை முதல்வர் ஆக்குவதற்கு இந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என பரவலாக பேசப்படுகிறது.
இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அளித்த பேட்டி:-
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் இக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். கடந்த மாதம் 27-ம் தேதி முதல் முறையாக கட்சியின் தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டினார்.
தற்போது 2-வது முறையாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா மீண்டும் கூட்டியுள்ளார்.
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்க ஒப்புதல் கடிதம் பெறுவதற்காகவே கூட்டம் கூட்டப்பட்டிருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்க ஒப்புதல் கடிதம் பெறுவதற்காகவே கூட்டம் கூட்டப்பட்டிருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
டிசம்பர் 31-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் அதிமுக புதிய பொதுச்செயலாளராக பதவி ஏற்றார். கடந்த மாதம் அவர் அதிமுக நிர்வாகிகளை மாவட்ட வாரியாக அழைத்து ஆலோசனை நடத்தினார்.
எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாள் முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரின் சிலைக்கு, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பற்றி கேட்ட பிறகு குறைந்தது 166 பேர் அதிர்ச்சி காரணமாக இறந்தார் என்று தமிழ்நாடு ஆளும் கட்சி அதிமுக கூறி இருந்தது.
உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று அதிமுக தலைமைக்கழகம் முன்பு அறிவித்து இருந்தது.
அதன்படி இன்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நிதி உதவி வழகினார்.
அதிமுக கழகத்தின் சார்பில் தலா 3,00,000 ரூபாய் குடும்ப நல நிதியுதவியும், தொடர்புடைய விபத்துகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 2 பேருக்கு தலா 50,000 ரூபாயும், மொத்தம் 4 கோடியே 99 லட்சம் ரூபாயை வழங்கினார்.
தொழில் புரிவதற்கு ஏற்ற மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று உலக வங்கி பாராட்டியுள்ளது என தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
இந்தியா டுடேவின் இரண்டு நாள் மாநாடு இன்று சென்னையில் துவங்கியது. இந்த மாநாடு முதன் முறையாக சென்னையில் நடக்கிறது. இந்த மாநாட்டை அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். துவக்க விழாவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவ படம் திறந்து வைக்கப்பட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த மாநாட்டில் 6 மாநில முதல்வர்கள், தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றனர்.
இந்தியா டுடே மாநாட்டை அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா குத்து விளக்கேற்றி துவங்கி வைத்தார்.
இந்தியா டுடேவின் இரண்டு நாள் மாநாடு இன்று சென்னையில் துவங்கியது. இந்த மாநாடு முதன் முறையாக சென்னையில் நடக்கிறது. இந்த மாநாட்டை அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா குத்து விளக்கேற்றி துவங்கி வைத்தார். துவக்க விழாவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவ படம் திறந்து வைக்கப்பட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த மாநாட்டில் 6 மாநில முதல்வர்கள், தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றனர்.
வரும் 17-ம் தேதி முதல் தனது அரசியல் பயணம் தொடரும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.
சென்னை தியாகராயநகரில் உள்ள தீபாவின் வீட்டிற்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிமுக தொண்டர்கள் வந்து அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் மத்தியில் தினசரி மாலையில் சிறிது நேரம் தீபா பேசி வருகிறார்.
தீபா கூறியதாவது:-
மக்களுக்கான பணியை தொடர காத்திருகேன் மேலும் உரிய காலத்தில் நல்ல முடிவை அறிவிப்பேன் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 5-ம் தேதி உடல் நலக்குறைவினால் ஜெயலலிதா மரணமடைந்தார். இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல் அமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால் பொதுச்செயலாளர் பதவி காலியாகவே இருந்தது. பிறகு சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த 4-ம் தேதி ஆலோசனை கூட்டம் தொடங்கியது. அன்றைய தினம் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இன்று சசிகலா 2-வது நாளாக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தமது அரசியல் பயணத்தை யாராலும் தடுக்க முடியாது என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்தார்.
சென்னை உள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீட்டு முன்பு ஆயிரத்திற்கு மேற்பட்ட அதிமுக -வினர் குவிந்துள்ளனர். தீபா அரசியலுக்கு வரவேண்டும் என்று அவர்கள் கோரிக்கையும் விடுத்த வண்ணம் உள்ளனர்.
சென்னை உள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீட்டு முன்பு ஆயிரத்திற்கு மேற்பட்ட அதிமுக -வினர் குவிந்துள்ளனர். தீபா அரசியலுக்கு வரவேண்டும் என்று அவர்கள் கோரிக்கையும் விடுத்த வண்ணம் உள்ளனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கோவை, திருப்பூர், மதுரை, ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, தேனி, தூத்துக்குடி, நெல்லை, வேலூர் மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து வந்துள்ளனர். இடைத்தேர்தலில் தீபா போட்டியிட வேண்டும் என அதிமுக தொண்டர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.