பலுசிஸ்தான் தலைநகர் குயிட்டாவில் பார் கவுன்சில் தலைவர், வழக்கறிஞர் பிலால் அன்வர் காசி இன்று காலை மர்மநபர்களால் தாக்கப்பட்டார். மர்மநபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து அன்வர் காசி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனைக்கு வழக்கறிஞர்கள், செய்தியாளர்கள் மற்றும் போலீசார் சென்றபோது பலத்த சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. வெடிகுண்டு வெடித்ததில் வழக்கறிஞர்கள், செய்தியாளர்கள், போலீசார் என அங்கியிருந்தவர்கள் அனைவரும் சிக்கிக் கொண்டனர்.
குண்டு வெடிப்பபின் போது 40 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் என்றும் 100-க்கும் அதிகமானோர் காயம் அடைந்து உள்ளனர் என்றும் பாகிஸ்தான் மீடியாக்கள் செய்தி வெளியிட்டது. ஆனால் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு நிலையில், சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்தது.
பலுசிஸ்தான் முதல்-மந்திரி சமா உல்லாக் ஜிக்ரி பேசுகையில்:- தாக்குதலுக்கு பின்னணியில் இந்தியாவின் உளவு அமைப்பான ’ரா’விற்கு தொடர்பு உள்ளது என்று குற்றம் சாட்டினார். மேலும் குயிட்டா மருத்துவமனை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார்.
இச்சம்பவத்தை குறித்து நவாஸ் செரீப் பேசுகையில்:- மருத்துவமனையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் ”விலைமதிப்பற்ற மனித உயிர்கள் இழப்பினால் பெரும் துன்பம் மற்றும் துயரம் அடைந்தேன். மாகாணத்தில் மீண்டும் கொண்டுவரப்பட்ட அமைதியை சீர்குலைக்க யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள், பாதுகாப்பு படை, போலீஸ் மற்றும் பலுசிஸ்தான் மக்களின் எண்ணிலடங்கா தியாகத்திற்கு நன்றி,”என்று நவாஸ் செரீப் கூறியுள்ளார்.