ஏர் பேக், சீட் பெல்ட் நினைவூட்டும் கருவி, வேக கட்டுப்பாடு கருவி, ரிவர்ஸ் கியர் எச்சரிக்கை, அவசர காலங்களில் வெளியேறும் வகையிலான சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் ஆகியவை வரும் 2019 ஜூலை 1-ம் தேதிக்குப் பிறகு தயாரிக்கப்படும் அனைத்து கார்களிலும் கட்டாயம் இடம்பெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட முடிவு செய்துள்ளது.
இந்த வசதிகள் அனைத்தும் சொகுசு கார்களிலில் உள்ளது. சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால், மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையதாவது:-
நாடு முழுவதும் ஒரே விதமான சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி வரியை ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தியது மத்திய அரசு. இந்த வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்ததும், ஜூலை மாதத்தில் ஜி.எஸ்.டி. மூலம் 94,063 கோடி ரூபாயும், ஆகஸ்ட் மாதத்தில் ஜி.எஸ்.டி. மூலம் 90,669 கோடி ரூபாயும் வருவாய் கிடைத்தது.
இந்நிலையில் செப்டம்பர் மாதம் ஜி.எஸ்.டி. மூலம் ரூ.92 கோடி கிடைத்துள்ளதாகவும், 42.91 லட்சம் பேர் வரி செலுத்தி உள்ளனர் எனவும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:-
கடந்த பிப்ரவரி 6-ம் தேதி தொலைபேசி சேவை வழங்குவோர் தங்கள் வாடிக்கையாளர்களின் மொபைல் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
எடப்பாடி பழனிச்சாமியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அவர் இசட் பிளஸ் எனப்படும், கருப்புப்பூனைப் படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு தமிழக காவல்துறையின் உளவுப்பிரிவு பரிந்துரைக்க தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கு பாமக தலைவர், எடப்பாடி பழனிச்சாமிக்கு கறுப்புப்பூனைப்படை பாதுகாப்பு வழங்குவது அப்படைக்கு செய்யும் அவமரியாதை ஆகும். எனவே, பழனிச்சாமிக்கு இசட் பிளஸ் காவல் கோரப்பட்டால் அதை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் அவர்கள் என தனது சமூக வலைதளங்களில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சிறு தொழில்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் பயன் பெரும் வகையில் ஜிஎஸ்டி விகிதத்தை குறைத்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தமிழிசை சவுந்தரராஜன்
அக்டோபர் 6-ம் தேதி டில்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 22 வது ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் சிறு தொழில்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் சுமையை குறைப்பதற்காக 27 பொருட்களுக்கான ஜிஎஸ்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளான.
குறைக்கப்பட்ட 27 பொருட்களில் அதிகமானவை மக்கள் அன்றாடம் பயன்படுத்தக் கூடியவை. அதான் விபரங்கள் :
1. உலறவைக்கப்பட்ட மாம்பழ துண்டுகள் (ஜிஎஸ்டி 12% லிருந்து 5 % ஆகிறது)
பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சட்டத்தை கையில் எடுத்தக்கொள்பவர்களை கண்காணிக்க அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
பசு பாதுகாப்பு என்ற பெயரில் சமூக விரோதிகள் அரங்கேற்றும் வன்முறை சம்பவங்களைத் தடுக்க சமூக ஆர்வலர் தெக்சீன் பூனவல்லா சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை கடந்த ஏப்ரல் மாதம் விசாரித்த சுப்ரீம் கோர்ட் பசு பாதுகாப்புப்பின் பெயரால் தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக விளக்கமளிக்க ஆறு மாநிலங்களுக்கு உத்தரவிடப்பட்டது.
செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அரசின் சமூக நல திட்டங்களை பெற ஆதார் எண்ணை இனைப்பது கட்டாயம் என மத்திய அரசு ஏற்கனவே கூறி இருந்தது. மேலும் இதற்க்கான காலக்கெடுவை நீட்டிக்கும் எண்ணம் ஏதும் இல்லை எனவும் கூறி இருந்தது.
நீண்ட நாளாக இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் பதிலளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் வாட்டிக்கையாளரின் தகவல் மற்றும் அவரது மொபைலில் சேமிக்கும் தகவல்கள் எந்த முறையில் பாதுகாக்கப்படுகிறது என்பது குறித்து விளக்கத்தை உடனடியாக அளிக்க மத்திய அரசு 21 ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்தியாவில் விற்கப்படும் ஸ்மார்ட் போன்களில் அதிகம் வாங்கப்படுபவை சீன ஸ்மார்ட், ஆப்பிள் மற்றும் மோட்டொரோலா போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்களும் பலரால் விரும்பி வாங்கப்படுகிறது.
இந்நிலையில், ஸ்மார்ட் போன்களில் சேமிக்கப்படும் வாடிக்கையாளரின் தகவல்கள் திருடப்பட வாய்ப்பிருப்பதாக மத்திய அரசுக்கு திடீர் அச்சம் எழுந்திருக்கிறது.
நீட் தேர்வில் தொடர்பாக தமிழக அரசின் விலக்கு கோரும் சட்ட வரைவினை மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது.
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்க மத்தியரசு உதவும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இதனையடுத்து கடந்த திங்களன்று டெல்லி சென்ற சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழக அரசின் சட்ட வரைவை மத்திய அரசிடம் சமர்ப்பித்தார்.
இந்த வரைவை ஏற்ற உள்துறை அமைச்சகம் தற்போது இந்த சட்ட வரைவை குறித்து தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. மேலும் நாளைக்குள் இது தொடர்பான முடிவு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
நடப்பு ஆண்டில் ஜிடிபி 6.75% முதல் 7.5% ஐ எட்டுவது கடினம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது பார்லிமென்ட்டில் மத்திய நிதி அமைச்சகம் தாக்கல் செய்துள்ள பொருளாதார அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில்,
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு ரூபாய் மதிப்பீடு, விவசாய கடன் தள்ளுபடிகள், மின்துறை, தொலை தொடர்புதுறை, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் நிலையற்ற தன்மை மற்றும் நெருக்கடிகள் அதிகரித்துள்ளது. பணக்கொள்கை பொருளாதார வளர்ச்சியை மேலும் பாதித்துள்ளது.
பட்டப்படிப்பு முடித்த முஸ்லிம் பெண்களுக்கு ரூ.,51000 நிதியுதவி வழங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
முஸ்லிம் சமுதாயத்தில், கல்லுாரிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பட்டப்படிப்பை முடிக்கும் முஸ்லிம் பெண்களுக்கு ரூ.,51000 நிதியுதவி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் நிதி உதவியின் கீழ் செயல்படும், மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளையின் பொருளாளர், ஷாகிர் ஹுசைன் அன்சாரி கூறியது:-
சிறுபான்மையினர் விவகார அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தலைமையில் நடந்த கூட்டத்தில்,
போலி மற்றும் மோசடி பெயரில் வாங்கப்பட்ட 11.44 லட்சம், பான் கார்டை அரசு முடக்கியுள்ளது.
பான் கார்டு வாங்குவதற்கு ஆதார் எண்ணைக் குறிப்பிடுவதை சமீபத்தில் கட்டாயமாக்கியது மத்திய அரசு. இதில் பலர் போலி பெயர் மற்றும் முகவரியில் பான் கார்டு வாங்குவதை தடுக்கவே இந்த நடவடிக்கை என்று கூறப்பட்டது.
இந்நிலையில் ஒருவர் பெயரிலேயே, ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை மத்திய அரசு முடக்கி வருகிறது. அதன்படி, நாடு முழுவதும், 11.44 லட்சம் பான் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இறப்பை பதிவு செய்ய ஆதார் எண் கட்டாயம் என்ற செய்தி உண்மை இல்லை என்றும், இறப்பை பதிவு செய்யவதற்கு ஆதார் எண் கட்டாயமில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பல சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணுடன் இணைப்பது அவசியம் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது. அதேபோல, பான் கார்டு பெறுவதற்கு, வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கி உள்ளது.
இந்நிலையில், இறப்பை பதிவு செய்ய ஆதார் எண் அவசியம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளதாகவும். வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என நேற்று ஊடங்களில் செய்திகள் வெளியாகின
நேற்று குஜராத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிடச் சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று ராஜஸ்தானில் வெள்ள பாதிப்புப் பகுதிகளைப் பார்வையிட்ட ராகுல் காந்தி, பின்பு குஜராத் மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட வந்த அவரின் கார் மீது கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் பெரும் கண்டனத்துக்குறியது என அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 77 தமிழக மீனவர்கள் இன்று தாயகம் திரும்புகிறார்கள்.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 77 தமிழக மீனவர்களை நேற்று இலங்கை அரசு விடுதலை செய்தது. விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் இன்று தாயகம் திரும்புவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டை முற்றிலுமாக அழித்து நாசப்படுத்தும் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் ஒப்பந்தத்தை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
அதைக்குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க கோரி தமிழக அமைச்சர்கள் இன்று பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசினார்கள்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியது,
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்படுமா? என்பது குறித்து தற்போது உறுதியாக கூறமுடியாது. தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுத்தர பிதரமரிடம் வலியுறுத்தப்பட்டது. அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துவதாக கூறினார்.
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தால் கட்டணம் செலுத்த தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த வழக்கறிஞர் சுங்கச்சாவடியில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற விளக்கத்தில் இந்த தகவல் வெளியானது.
மத்திய அரசு கொடுத்த அளித்த விளக்கத்தில்:-
கடந்த சில மாதங்களுக்கு முன் மாட்டிறைச்சி விற்பனை செய்வதற்கும், மாட்டிறைச்சி விற்பனை கூடரங்களுக்கும் மத்திய அரசு திடிரென தடை விதித்தது.
இந்த தடை உத்தரவிற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா, புதுச்சேரி, மேகாலயா ஆகிய மாநில சட்டசபையில் தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்களை நான் பரிந்துரை செய்யவில்லை. மத்திய அரசு தான் நேரடியாக நியமித்துள்ளது. மேலும் இது சட்டப்படி தான் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து அரசுக்கு தவறான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த விவகாரம் சரி செய்யப்படும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
இன்று புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக பந்த் போராட்டம் தொடங்கியது. இதனையடுத்து புதுச்சேரியில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.