திமுக தலைவர் கருணாநிதி நேற்று இரவு முரசொலி பவள விழா கண்காட்சியின் அரங்கை பார்வையிட்டு நெகிழ்ந்தார். உடல்நலக் குறைவால் கடந்த ஓராண்டாக காலமாக கருணாநிதி அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறார்.
கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி முரசொலி மாறன் பிறந்த நாள் அன்று முரசொலி அலுவலகத்துக்கு கருணாநிதி வந்தார். தற்போது உடல்நலம் தேறிய நிலையில் நேற்று இரவு முரசொலி அலுவலகத்துக்கு கருணாநிதி வந்தார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கருணாநிதியை வரவேற்று அழைத்து சென்றனர்.
முரசொலி பவள விழாவில் கமல் மற்றும் ரஜினி அழைப்பு
1942-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி, திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி துவங்கப்பட்டது. முரசொலி துவங்கப்பட்டு வரும் ஆகஸ்ட் மாதத்துடன் 75 வருடங்கள் ஆகிவிட்டது. முரசொலி பத்திரிக்கையின் 75 ஆம் நிறைவு ஆண்டை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி திமுக சாபில் முரசொலிக்கு பிரம்மாண்டமான பவள விழா நடைபெறுகிறது. இந்த விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.
நேற்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொதுச்செயலாளர் க.அன்பழகன் ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பவள விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினர்.
முரசொலி 75-ம் ஆண்டு பவள விழா அடுத்த மாதம் 10-ம் மற்றும் 11-ம் தேதிகளில் நடைபெறுகிறது.
10-ம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு எழுத்தாளர்கள் அனைத்து பத்திரிகை ஆசிரியர்களையும் அழைக்க உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த மற்றும் கமல்ஹாசன் ஆகியோரை அழைத்துள்ளனர். இருவரும் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் கூறப்படு கிறது.
அனைத்து கட்சி 2-ம் நாள் விழா நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடக்கிறது. இந்த விழாவில் அனைத்து கட்சி தலைவர்களையும் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.