சர்வதேச மகளிர் தினத்தை நினைவூட்டும் வகையில் வரும் மார்ச் 8 ஆம் நாள் AirIndia நிறுவனம், பெண்கள் குழுவினை மட்டுமே கொண்டு விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது!
அவசர மூலதன செலவுகளை சமாளிக்க ஏர் - இந்தியா விமான நிறுவனம் வங்கிகளிடம் 1,500 கோடி ரூபாய் கடனை கோரி உள்ளது.
இது குறித்து, ஏர் - இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:- அவசர மூலதன தேவைகளை, உடனடியாக பூர்த்தி செய்ய 1,500 கோடி ரூபாய் குறுகிய கால கடன் தேவைப்படுகிறது. இதற்கான, 'டெண்டர்' வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த கடனுக்கு, மத்திய அரசு உத்தரவாதம் அளிக்கும். உத்தரவாத காலம், கடன் வழங்கப்பட்ட தேதியில் இருந்து, 2018 ஜூன், 26க்குள்ளாகவோ அல்லது பங்கு விற்பனை முடிவுறும் காலம் வரையிலோ இருக்கும்.
மதுரை - சென்னை சிறியரக விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் இன்று தொடங்கியது.
தென்மண்டல ஏர் இந்தியா நிறுவனம் சென்னையில் இருந்து திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களுக்கு தினசரி புதிய விமான சேவையை தொடங்கப்போவதாக அறிவிவித்திருந்தது.
ஏர் இந்தியா நிறுவனத்தின் இந்த விமான சேவையில் 70 பயணிகள் பயணம் செய்யும் வகையில் சிறிய ரக விமானம் இயக்கப்பட உள்ளது.
அதன்படி, ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ‘அலையன்ஸ் ஏர்’ நிறுவனத்தின் சார்பில் மதுரையிலிருந்து சென்னைக்கு சிறியரக விமான சேவை தொடங்கப்பட்டது.
ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானங்களில் ஏறுவதற்கு முப்படை வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்ரூ ஏர் இந்தியா நிறுவனம் புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்தின் சேர்மன் அஸ்வானி லோஹனி கூறுகையில், இந்த அறிவிப்பு மூலம் நுழைவாயில்களில் பாதுகாப்பு படை வீரர்களே உள்ளே செல்ல முதலில் அழைக்கப்படுவார்கள். முதல்வகுப்பு மற்றும் பிசினஸ் வகுப்பு பயணிகளுக்கு முன்பாக வீரர்கள் அழைக்கப்படுவார்கள்.
மேற்கு வங்காள பகுதியான பக்தோக்ராவில் இருந்து நேற்று டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் ஏசி இயங்காததால் விமானப் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
ஏசி இயங்காத காரணத்தால் புழுக்கம் ஏற்பட்டு தங்களிடம் இருந்த பேப்பர், நோட்டு, கை விசிறி, குறிப்பு புத்தகம் போன்றவற்றால் காற்று வீசிக் கொண்டு டெல்லி வந்து சேர்ந்தனர்.
விமானம் டெல்லி வந்ததும், பைலட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தங்களுக்கு நீதி வேண்டும் என்று கோரி பயணிகள் விமானத்தை விட்டு இறங்கவில்லை.
அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று இலங்கை புறப்பட்டு சென்றார். இன்று கொழும்பு பண்டார நாயக ஹாலில் சர்வதேச புத்தபூர்ணிமா கொண்டாட்டம் நடைபெற்றது.
அந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் இலங்கை அதிபர் மைத்ரி பாலசிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, வெளிநாட்டு தூதர்கள், அரசியல் பிரமுகர்கள், சர்வதேச புத்தமத தலைவர்கள் பங்கேற்றனர்.
பிரதமர் மோடி விழாவில் பேசியதாவது:-
விமானத்தில் பயணிகளின் அத்துமீறலை தடுக்க புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ள ஏர்இந்தியா, இதுபோன்ற பயணிகளுக்கு அபராதம் விதிக்க மேற்கொள்ள முடிவு செய்து உள்ளது.
விமானத்திற்கு ஒரு மணிநேரம் காலதாமதம் ஏற்பட்டால் ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என ஏர் இந்தியா முடிவு செய்து உள்ளது.
ஒரு மணி நேரத்திற்கு மேல் 2 மணி நேரத்திற்குள் காலதாமதம் ஆனால் ரூ. 15 லட்சம் வரையில் அபராதம் விதிக்கப்படும். அதற்கு மேல் காலதாமதம் ஆனாலும் பயணிகளுக்கு ரூ. 15 லட்சம் அபராதம் விதிக்க என ஏர்இந்தியா முடிவு செய்து உள்ளது என ஏர்இந்தியா திட்டமிட்டு உள்ளது.
சிவசேனா எம்.பிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய இந்தியன் ஏர்லைன்ஸ் கூட்டமைப்பு.
ஏர் இந்தியா மேலாளரை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட்டிற்கு ‘இந்தியன் ஏர்லைன்ஸ் கூட்டமைப்பு’ தடை விதித்து உள்ளது. இப்பிரச்சனையை முன்வைத்து பாராளுமன்றத்தில் சிவசேனா கட்சி எம்.பிக்கள் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, சிவசேனா எம்.பி.க்கள் பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜனை நேற்று அவரது அறையில் சந்தித்து பேசினார்கள்.
ஏர் இந்தியா விமான ஊழியரை செருப்பால் அடித்தார் சிவசேனா கட்சி எம்பி ரவீந்திர கெய்க்வாட்.
சிவசேனா எம்பி ரவீந்திரா கெய்க்வாட் ஏர் இந்தியா விமானத்தில் புனேவில் இருந்து டெல்லிக்கு பயணம் செய்தார். அப்போது, விமானத்தினுள் அமரும் சீட் ஒதுக்கீடு காரணமாக பிரச்சினை எழுந்தது.
அதுகுறித்து ஏர் இந்தியா விமான ஊழியர் விசாரித்த போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றி தான் அணிந்திருந்த செருப்பை கழற்றி விமான ஊழியரை சிவசேனா கட்சி எம்பி அடித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா பெண்களுக்கு 6 தனி இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிப்பு
இந்திய அரசாங்கத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா இந்த மாதம் 18-ம் தேதி முதல் விமானங்களில் பயணம் செய்யும் பெண்களுக்கு தனியாக 6 இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.