நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே கடலில் மின்பிடிக்கச் சென்றனர். அப்போது இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் 10 படகுகளையும் 32 மீனவர்களையும் சிறை பிடித்துள்ளனர்.
இதேபோல, ஜகதாபட்டிணத்தை சேர்ந்த மீனவர்கள் 20 பேரும் கைதாகியுள்ளனர் என்றும் அவர்களது 5 படகுகளும் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம், நாகை மாவட்டங்களை சேர்ந்த 32 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைதுசெய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சேலம் செல்லும் வழியில், கோவை மாவட்டம் கனியூரில் மு.க.ஸ்டாலின் கைது.
முன்னதாக சேலம் கட்சராயன்குட்டையில் உள்ள ஏரியை தூர்வாரும் பணிகளை பார்வையிட திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பார்வையிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2 நாட்களாக ஏரிப் பகுயில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. இதனிடையே மு.க.ஸ்டாலின் சேலம் வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்திருந்தார்.
புதுக்கோட்டையில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் திறப்பு விழா இன்று நடைபெற்று வருகிறது. தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த கட்டடத்தை திறந்து வைக்கிறார்.
இந்நிலையில், திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த பெரியண்ண அரசு, ரகுபதி, சிவமெய்யநாதன் ஆகிய 3 திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழாவில் கலந்து கொள்ள புறப்பட்டு கொண்டிருந்த நிலையில் புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் இந்த மூன்று எம்.எல்.ஏ.க்களையும் கைது செய்ததாக எம்.எல்.ஏ. ரகுபதி தெரிவித்தார்.
ராமேஸ்வரம் தங்கச்சி மடம் பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்கள் இன்று காலை ஒரு நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்றனர்.
தனுஷ்கோடி மன்னார் வளைகுடா இடையே உள்ள கடல் பகுதியில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சிறிய ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை சுற்றி வளைத்து தகாத வார்த்தைகளால் பேசினர். மேலும் மீனவர்களை தாக்கி, மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே பழைமையான மரகதலிங்கத்தை விற்க முயன்றதாக இருவரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மரூதூர் பகுதியைச் சேர்ந்த கலியமுர்த்தி என்பவரிடம் இருந்த பழமை வாய்ந்த மரகதலிங்கத்தை விற்க முயற்சி செய்து வந்துள்ளார். இந்த தகவலை அறிந்த போலீசார், அவரை கண்காணித்து வந்தனர்.
நேற்றிரவு கோவிந்தபுரத்தில் கலியமூர்த்தி (58) மற்றும் அவரது நண்பர் விஜயராகவன் (37) ஆகியோர் மரகதலிங்கத்தை விற்க வந்துள்ளனர். அப்போது அங்குவந்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் இருவரையும் மடக்கிப் பிடித்து மரகதலிங்கத்தை பறிமுதல் செய்தனர்.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த இந்திய மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். படகு பழுது காரணமாக நின்ற ஜஸ்டீன் என்பவரது படகில் இருந்த 10 மீனவர்களை சிறைபிடித்து காங்கேசன் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படையினர் கொண்டு சென்றனர். படகையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.
இன்று டெல்லியில் மீனவ பிரதிநிதிகள் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்திக்க உள்ள நிலையில், இலங்கை கடற்படையினரின் செயல் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் செம்மரம் வெட்டச்சென்றதாக 174 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திரப் பிரதேசத்தின் காஜூபேட்டையில் செம்மரம் வெட்டச்சென்றதாக 16 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்பனையில் லங்கமல்லாவில் 158 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மொத்தம் 174 தமிழர்கள் செம்மரம் வெட்டச்சென்றதாக குற்றம்சாட்டப்பட்டு, ஆந்திர செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 10 டன் செம்மரம், 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தேசிய பெண்கள் நாடாளுமன்ற மாநாட்டில் பங்கேற்க சென்ற ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ, நடிகையுமான ரோஜாவை போலீஸார் கைது செய்தனர்.
அமராவதியில் தேசிய மகளிர் நாடாளுமன்றம் என்ற பெயரிலான 3 நாள் மாநாடு நடைபெறுகிறது. இந்த அமைப்பிலும், வரவேற்புக் குழுவிலும் ரோஜா உறுப்பினராக உள்ளார். அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாதில் இருந்து விமானம் மூலம் விஜயவாடாவுக்கு ரோஜா நேற்று வந்தார். விமான நிலையத்தில் அவர் வந்திறங்கியதும், அங்கு காத்திருந்த போலீஸார் ரோஜாவை கைது செய்தனர். இதனால் ரோஜாவிற்கும், போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ராமேசுவரம், தங்கச்சி மடம் பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் நெடுந்தீவு அருகே நடுக்கடலில் வலைகளை விரித்து, மீன்பிடி பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு திடீரென இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பல்களில் வந்தனர். அவர்கள் மீனவர்கள் விரித்திருந்த வலைகளை அறுத்து சேதப்படுத்தி மீனவர்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது.
அதில் இருந்த 10 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர்.
மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் தாக்கப்பட்டு 11 பேர் சிறைபிடிக்கப்பட்டனர்.
கடந்த சில நாட்களாக 500, 1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதாக அறிவித்ததால் மீன்பிடி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டது. மீன்கள் வாங்க வியாபாரிகள் வருகை குறைவு என்பதால் தற்கா லிகமாக மீன்பிடிக்க செல்ல மீனவர்கள் நிறுத்தி வைத்திருந்தனர். இதனால் கடந்த ஒரு வாரமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இந்நிலையில் தற்போது நிலைமை ஓரளவு சீரான நிலையில் நேற்று மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
- தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விட்டுள்ளதை கண்டித்து கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கர்நாடகத்தில் நாளை காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை ரெயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம்.
ராஜஸ்தானில் பாகிஸ்தானை சேர்ந்த உளவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
நந்தலால் மகாராஜ் என்பவரை நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், அவர் பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கடத்தி வந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் எல்லையில் உள்ள முனாபோ என்ற பகுதிக்கு முறையான பாஸ்போர்ட் மூலம் இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார் என உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கொழும்பில் உள்ள தனக்கு சொந்தமான நிறுவனம் மூலம், ஹேலோகோப் என்னும் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதில் நாமல் ராஜபக்சே பெரும் நிதி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இலங்கை மதிப்பில் சுமார் 25 கோடி ரூபாய் பங்குகளை வாங்கியது தொடர்பாக அவர் காவல்துறையின் நிதிமோசடி விசாரணைப் பிரிவினரால் நேற்று விசாரணைக்கு நேரில் வருமாறு அழைக்கப்பட்டிருந்தார்.
மேற்கு டெல்லியின் சுபாஷ் நகர் பகுதியில் இ-ரிக்ஷா ஒன்றின் மீது நேற்று அதிகாலை டெம்போ வேன் ஒன்று பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ரிக்ஷா ஓட்டுநர் 40 வயதுடைய மதிபூல் என்பவர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். சுமார் ஒன்றரை மணி நேரமாக அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த போதும், அவ்வழியாக நடந்தும், வாகனங்களில் சென்ற பலரும் வெறும் வேடிக்கை பார்த்துக்கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமிரா ஒன்றில் பதிவாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.