ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படை சிறைபிடிப்பு

Last Updated : May 1, 2017, 02:15 PM IST
ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படை சிறைபிடிப்பு title=

ராமேஸ்வரம் தங்கச்சி மடம் பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்கள்  இன்று காலை ஒரு நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்றனர். 

தனுஷ்கோடி மன்னார் வளைகுடா இடையே உள்ள கடல் பகுதியில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சிறிய ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை சுற்றி வளைத்து தகாத வார்த்தைகளால் பேசினர். மேலும் மீனவர்களை தாக்கி, மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர்.

தொடர்ந்து எல்லை தாண்டி வந்து மீன் பிடித்த தாக 5 மீனவர்களை படகுடன் சிறைபிடித்துச் சென்றனர். இலங்கை மன்னார் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட மீனவர்கள் இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்டு சிறையில் அடைக்கப் படுவார்கள் என தெரிகிறது.

Trending News