சந்தான பாரதி இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து கடந்த 1991ஆம் ஆண்டு வெளியான 'குணா' திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்யத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
50 Lakh Ruppes Compensation: திருநங்கை அப்சரா ரெட்டியின் புகழுக்கும் கண்ணியத்திற்கும் இழுக்கு ஏற்படும்படி சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்த யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று நீதிபதி
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து காணாமல்போன 70 வயது முதியவர் இறந்திருக்கலாம் என சிபிசிஐடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கபட்டுள்ளது.
சக மாணவர்களுடன் புறநகர் ரயில் பயணிகளை கத்தியை காட்டி மிரட்டிய மாணவருக்கு முன்ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், மறுவாழ்வு மையத்தில் சேவை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையில் அவரை விடுவித்தது.
இயக்குநர் சுசி கணேசனுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிட லீலா மணிமேகலை மற்றும் சின்மயிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு மாணவ-மாணவிகளை அழைத்துச் செல்ல விதிக்கப்பட்ட தடையை நீக்க இயலாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
முன்னதாக ’மாற்றம் இந்தியா’ அமைப்பின் இயக்குனர் நாராயணன்; சென்னை உயர் நீதிமன்றம் ‘அரசு சார்பில் கொண்டாடப்படும் விழாக்களில் கூட்டத்தை காண்பிப்பதற்காக அரசுப்பள்ளி மாணவ-மாணவியரை அழைத்துச் செல்ல தடை விதிக்க வேண்டும்’ என மனு ஒன்றினை தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவிற்கு அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர். அவர்களை அழைத்துச் செல்ல தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனர் நாராயணன்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு பள்ளி மாணவ-மாணவிகளை அழைத்துச் செல்ல இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. ஆனால் தடையை நீக்க கோரி தமிழக அரசு சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி இன்று பதவியேற்கிறார்.
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன் கவுல், பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகப் பதவி உயர்வு அடைந்ததையடுத்து, பொறுப்புத் தலைமை நீதிபதியாக, ஹூலுவாடி ஜி.ரமேஷ் நியமிக்கப்பட்டிருந்தார். அவருக்கு, தமிழகப் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார்.
அரச அலுவலகங்களில் மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா புகை படங்களை தொடர்பாக தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது
சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 14-ம் தேதி மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா ஊழல் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் அரச அலுவலகங்கள் மற்றும் அரசு திட்டங்களில் இருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் திமுக மற்றும் பாமக சார்பில் 3 மனுக்கள் தாக்கல் செய்தனர். இவ்வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஹூலுவாடி ரமேஷ், நீதிபதி மகாதேவன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் 11 பேரின் நியமனம் செல்லாது என சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த முதல் அமர்வு தலைமை நீதிபதிகள் கூறியதாவது:-
டிஎன்பிஎஸ்சி-ன் 11 பேரது நியமனமும் முறைப்படி நடக்கவில்லை. தகுதி இல்லாதவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எனவே நியமன ஆணை ரத்து செய்யப்படுகிறது என நீதிபதி தெரிவித்தார். மேலும் உரிய விதிகளைப் பின்பற்றாமல் நியமனங்கள் நடந்ததாகவும் நீதிபதிகள் கூறினார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.