பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையில் பட்டினிச் சாவு போன்ற சூழல் நிலவுகிறது. இதற்கிடையில் உணவு நெருக்கடியை தவிர்க்கும் வகையில் இந்தியாவிலிருந்து 2 மில்லியன் முட்டைகளை இலங்கை இறக்குமதி செய்துள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், 6.5 பில்லியன் டாலர் கடன் பெற மேலும் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது. திவால் நிலையைத் தவிர்க்க, பாகிஸ்தானுக்கு இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
பாகிஸ்தானின் பண வீக்க விகிதம் 33 சதவிகிதத்தை எட்டும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், 1980களில் இருந்து 13வது முறையாக கடன் உதவி தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் பாகிஸ்தான் "தீவிரமான பேச்சுவார்த்தைகளில்" ஈடுபட்டுள்ளது.
பாகிஸ்தானில் மாவு மற்றும் பருப்புகளின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருகிறது. இதனால் பொது மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளான நிலையில், அரசு அதிகாரிகள் அதை பற்றி பல ஊழல்களை செய்து வருகின்றனர்.
தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், தற்போது அமெரிக்காவிடம் உதவி கேட்டு வருகிறது. சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) பணியாளர்கள் நிலை ஒப்பந்தம் பெற அமெரிக்கா உதவ வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புகிறது.
Silicon Valley Bank Collapse: அமெரிக்காவின் கலிப்போர்னியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் சிலிக்கான் வேலி பேங்க் பங்குகள் 85 சதவீதம் சரிந்ததால், அந்நாட்டு வங்கி துறை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.
பிரிட்டன் மக்கள் தற்போது தக்காளி, வெள்ளரி மற்றும் மிளகாய் போன்ற காய்கறிகளுக்கு கடும் பற்றாக்குறையை எதிர்கொண்டு, கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பல பகுதிகளில் பல நாட்களாக காய்கறி கடைகளுக்கு தக்காளி வரவில்லை.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்தும், பாகிஸ்தான் நாட்டவர் ஒருவர் ஷேபாஸ் ஷெரீப் அரசாங்கத்தை கடுமையாக விமர்சனம் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் உறவுகள்: பாகிஸ்தான் பல கடுமையான பிரச்சனைகளால் தவித்து வருகிறது. ஒரு புறம் பொருளாதார நெருக்கடி அதற்கு சவாலாக இருந்து வரும் நிலையில், மறு புறம் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகிறது.
பாகிஸ்தான் பணவீக்கம்: பாகிஸ்தானின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது, மாவு மற்றும் பருப்புக்காக மக்கள் ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவிட வேண்டியுள்ள நிலையில், மறுபக்கம் நவாப்கள் ஆடம்பரமாய் வாழுகின்றனர்.
கடுமையான பொருளாதார நெருக்கடியை பாகிஸ்தான் சந்தித்து வரும் நிலையில், அங்கு மக்கள் உணவுக்காக அடித்திக் கொள்ளும் வீடியோக்கள் பல சமூக ஊடகங்களில் வைரலாகி வந்த நிலையில், தற்போது மின்சார பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.
வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தை கையாள்வதில் பாகிஸ்தான் திணறி வரும் இந்த நேரத்தில், சீனா அதற்கு உதவாமல், நிலமையை தனக்கும் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது.
பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஒருபுறம் கூறி வரும் நிலையில், மறுபுறம் பாகிஸ்தான் ஊடகங்கள் பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளுகின்றன.
பாகிஸ்தானில் சில பகுதிகளில் அவர்களின் மிக முக்கிய உணவான கோதுமை மாவு கிடைக்காமல், பற்றாக்குறை இருப்பதால் பாகிஸ்தான் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொள்கிறது.
பாகிஸ்தானில் கோதுமை மாவு உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், இந்தப் பட்டியலில் கடைசியாக சிக்கனும் சேர்ந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் புதிய கட்டிடத்தில் இயங்கி வரும் நிலையில், நகரைன் மைய பகுதியில், இந்திய தூதரகத்திற்கு அருகில் பழைய தூதரக கட்டிடம் அமைந்துள்ளது.
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி: பாகிஸ்தானின் நிதியமைச்சர் இஷாக் டார் பலமுறை உறுதியளித்த போதிலும், நாட்டின் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சர்வதேச சந்தை பாகிஸ்தான் உத்தரவாதங்களை நம்பத் தயாராக இல்லை.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தயாவசிய பொருட்களின் கடும் விலை ஏற்றம் மற்றும் அத்தியவசிய பொருட்களின் தட்டுபாடு காரணமாக இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு கடல் வழியாக தமிழகத்திற்குள் அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர்.
இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் தேதி பட்ஜெட்டை சமர்ப்பிக்க உள்ள நிலையில், அங்கே ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடையத் தொடங்கிவிட்டன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.