குஜராத்தின் பருச்சில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 12 கொரோனா வைரஸ் நோயாளிகள் கொல்லப்பட்டனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் கொரோனா பரவல் நாளுக்குநாள் மிகவும் அதிகமாக இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் மக்களின் வாழ்க்கை முறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
70வது பிறந்தநாளைக் கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோதியை வாழ்த்த வயது தேவையில்லை. இந்திய நாட்டை வழிநடத்தும் முக்கியப் பொறுப்பில் இருக்கும் அவருடைய பிறந்தநாள் பொன்னாளாக மலரட்டும். Happy Birthday PM Modi!!!
இந்தியாவில் முதல் முறையாக புல்லட் ரயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை அகமதாபாத்தில் நடைபெறுகிறது. ஜப்பான் நாட்டின் உதவியுடன் இந்தியாவில் முதல் முறையாக புல்லட் ரயில் மும்பை - அகமதாபாத் இடையே இயக்கத் திட்டமிடப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை அகமதாபாத்தில் நடைபெற உள்ள நிலையில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் அவரது மனைவி அரசு முறை பயணமாக இன்று குஜராத் வந்தனர்.
நேற்று குஜராத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிடச் சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று ராஜஸ்தானில் வெள்ள பாதிப்புப் பகுதிகளைப் பார்வையிட்ட ராகுல் காந்தி, பின்பு குஜராத் மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட வந்த அவரின் கார் மீது கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் பெரும் கண்டனத்துக்குறியது என அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் வன்முறை வெடித்தது. அப்போது வன்முறைக் கும்பல் ''குல்பர்க் சொசைட்டி'' இருந்த முஸ்லிம் 69 பேரை படுகொலை செய்தது. இந்த கொலையில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஈசன் ஜாப்ரியும் கொல்லப்பட்டார்.
கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் வன்முறை வெடித்தது. அப்போது வன்முறைக் கும்பல் ''குல்பர்க் சொசைட்டி'' இருந்த முஸ்லிம் 69 பேரை படுகொலை செய்தது. இந்த கொலையில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஈசன் ஜாப்ரியும் கொல்லப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் உச்ச நீதிமன்றம் கண்காணிப்பில் நடந்து வந்தது. சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.பி தேசாய் இன்று தீர்ப்பு வழங்க உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.