இந்த கடுமையான கோடைக்காலத்தில் சூரியனின் சுட்டெரிக்கும் வெயிலால் சருமம் கருத்துப்போவது, சோர்வடைந்து போவது என அழகுக்கு பலவிதமான சவால்கள் காத்திருக்கின்றன.
ஹோமியோபதி பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்? இந்த மருத்துவத்தின் அதிசயத்தைப் பற்றி பெரும்பாலான மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனியில் உருவாக்கப்பட்ட ஹோமியோபதி மருத்துவ முறையின் அற்புதம் அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய ஒன்று.
தேங்காய் சுலபமாக கிடைக்கும் அற்புதமான உணவு. தேங்காயை அப்படியே சாப்பிடலாம் அல்லது சமைத்தும் சாப்பிடலாம். எப்படி சாப்பிட்டாலும் ஆரோக்கியமான இந்த காய், கனியின் அற்புத பலன்களையும் கொண்டது.
நமக்கு ஏற்படும் நோய்களுக்கும், நமது உணவு பழக்கத்திற்கும் தொடர்பு உள்ளது. உணவே மருந்து என்பதால், உண்ணும் உணவுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நோய் நம்மை நாடாது
குளிர்காலத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம், நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருப்பது. இந்த குளிர்காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க என்ன சாப்பிட வேண்டும் என்பது ஒரு பெரிய கேள்வியாகத் தான் இருக்கிறது.
தற்போது நாட்டில் பல பகுதியில் குளிர்காலம் (Winter Season) ஆரம்பமாகி விட்டது. இந்த நேரத்தில் சில காய்கறிகளும் பழங்களையும் எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். அவை நம் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன மற்றும் நம்மை சில தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கின்றன. அத்தகைய சிறப்பு பாதுகாப்பை வழங்கும் காய்கறிகளில் முள்ளங்கியும் ஒன்றாகும். அதன் முக்கிய நன்மைகளை இங்கே காண்போம்.
உலர்ந்த வாய், துர்நாற்றம் ஏற்படுவதற்கான மிகப்பெரிய காரணமாகும். வாயில் இருக்கும் உமிழ்நீர் சுரப்பிகள் போதுமான அளவு உமிழ்நீரை உற்பத்தி செய்யாதபோது, வாய் வறண்டு போகத் தொடங்குகிறது.
கிரீன் டீ ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. கிரீன் டீ ஆரோக்கியத்தை மட்டுமல்ல, உங்கள் சருமத்தையும் முடியையும் மேம்படுத்த உதவும். கல்லீரல் நோய்கள் முதல் வகை 2 நீரிழிவு நோய், இதய நோய், அல்சைமர் நோய் மற்றும் பல புற்றுநோய்கள் போன்ற நோய்களைத் தடுக்க கிரீன் டீ உதவும் என்று பல ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தியுள்ளன.
இந்தியா மற்றும் சீனாவின் பாரம்பரிய மருந்துகளில் கிரீன் டீ பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் கிரீன் டீ மிகவும் பிரபலமாகிவிட்டது. குறிப்பாக கிரீன் டீயின் எடை இழப்பு விளைவு காரணமாக, ஏராளமான மக்கள் கிரீன் டீயை உட்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
வாய் துர்நாற்றம், பலர் அனுபவிக்கும் ஒரு பரவலான பிரச்சனையாகும். இது பல காரணங்களால் ஏற்படுகிறது. மருத்துவ மொழியில் இது பாக்டீரியாவால் ஏற்படும் ஹலிடோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. நாம் சாப்பிடும்போதெல்லாம், உணவில் இருக்கும் சர்க்கரை மற்றும் மாவுச்சத்தை வாயில் இருக்கும் இந்த பாக்டீரியாக்கள் உடைக்கின்றன. இந்த செயல்பாட்டின் போது பாக்டீரியா ஒரு வகையான வாயுவை உருவாக்குகிறது. இது துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.