தைராய்டு பிரச்சனையா? இந்த பழங்கள் இருக்கும்போது கவலை எதுக்கு?

நமக்கு ஏற்படும் நோய்களுக்கும், நமது உணவு பழக்கத்திற்கும் தொடர்பு உள்ளது. உணவே மருந்து என்பதால், உண்ணும் உணவுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நோய் நம்மை நாடாது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 9, 2022, 06:30 AM IST
  • தைராய்டு என்றால் என்ன?
  • தைராய்டு இருந்தால் என்ன சாப்பிட கூடாது?
  • தைராய்டு பிரச்சனையை போக்கும் பழங்கள்
தைராய்டு பிரச்சனையா? இந்த பழங்கள் இருக்கும்போது கவலை எதுக்கு? title=

உடலில் ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது தைராய்டு சுரப்பி. இந்த சுரப்பியால் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்களின் அளவுகளில் ஏதேனும் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டால்சோர்வு, முடி இழப்பு, எடை அதிகரிப்பு, குளிர் மற்றும் பல அறிகுறிகளை ஏற்படுத்தும்.

தைராய்டு சுரப்பியின் இயக்கத்திற்கு நாம் உண்ணும் உணவும் மிக முக்கிய காரணியாக அமைகிறது. ஹைப்போ தைராய்டிசம் (hypothyroidism), இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்களுக்கு குறைவான ஹார்மோன் உற்பத்தி ஆகும்.

அதேபோல  அதிக ஹார்மோன் உற்பத்திகுவது ஹைப்பர் தைராய்டிசம் (hyperthyroidism) என்று அறியப்படுகிறது. இந்த இரண்டு சிக்கல்களுமே தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை பாதிக்கும் வெவ்வேறு நோய்களால் ஏற்படுகின்றன.

ALSO READ | நோய் எதிர்ப்பு சக்தி உணவு குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன?

சத்தான மற்றும் நன்கு சமநிலையான உணவு உட்கொண்டால் மட்டுமே தைராய்டு பிரச்சினைகளை குணமாகிவிடும் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் சரியான மருந்துவ ஆலோசனைகளுடன் சிகிச்சைகளையும் எடுத்துக் கொண்டு, உரிய உணவையும் உண்டு வந்தால் தைராய்டு பிரச்சனை நீங்கிவிடும். 

அயோடின், கால்சியம் மற்றும் வைட்டமின் டி போன்ற சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது தைராய்டு சுரப்பியின் சரியான இயக்கத்திற்கு உதவும். 

தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்ய உதவும் பழங்கள் இவை...

பெர்ரி பழங்கள்

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பழங்கள் தைராய்டு சுரப்பிக்கு உகந்தவை. அவை தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியைத் தூண்டி, சீராகச் செயல்பட உதவுகின்றன. இவற்றில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.

அவை ஃப்ரீ ரேடிக்கல்களால் (free radicals) ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன.  

FOOD

ஆரஞ்சு

வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஆரஞ்சு, செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கும். ஃப்ரீ ரேடிக்கல்கள் தைராய்டு சுரப்பியில் வீக்கத்தை ஏற்படுத்தி அதன் செயல்பாட்டை பாதிக்கலாம். 

வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதுடன், கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துகிறது, மற்றும் காயங்களைக் குணப்படுத்த உதவுகிறது.

ALSO READ | பாலுடன் கூட்டணி வைத்தால் ஆரோக்கிய வெற்றி பெறுவது தேனா? பழமா?

அன்னாசி

அன்னாசிப்பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் மாங்கனீசு சத்து உள்ளது, இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களும் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து நம் உடலைப் பாதுகாக்கும். இந்த சிட்ரஸ் பழத்தில் வைட்டமின் பி உள்ளது, இது தைராய்டின் அறிகுறிகளில் ஒன்றான சோர்வைப் போக்க உதவும். புற்றுநோய், கட்டிகள், மலச்சிக்கல் போன்றவற்றால் அவதிப்படுபவர்களுக்கும் அன்னாசிப்பழம் சாப்பிடுவது நல்லது.

ஆப்பிள்

ஆப்பிள் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகும் மற்றும் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிப்பதை தடுக்கலாம். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தலாம் மற்றும் தைராய்டு சுரப்பியை வேலை செய்யும் நிலையில் வைத்திருக்கலாம். 

தைராய்டு சுரப்பி நன்றாக செயல்பட உதவும் ஆப்பிள்கள் உடலின் நச்சை நீக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, தைராய்டு, உடல் பருமன் மற்றும் இதய நோய்களைத் தடுக்கிறது ஆப்பிள்.

(பொறுப்புத்துறப்பு: மேலே உள்ள தகவல் மற்றும் பரிந்துரைகள் பொதுவான தகவலுக்கானவை இதை தொழில்முறை மருத்துவரின் ஆலோசனையாக எடுத்துக்கொள்ளக்கூடாது. உங்களுக்கு ஏதேனும் ஆரோக்கிய குறைபாடு இருந்தால் மருத்துவ நிபுணரை அணுகவும்)

ALSO READ | Puppies Cute Video: கடும் குளிரில் நாய் குட்டிகள் குளிர் காய ‘தீ’ மூட்டிய கருணை மனம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News