Happy Birthday Dhoni: கிரிக்கெட் நாயகன் தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

சாதாரண குடும்பத்தில் பிறந்து கிரிக்கெட்டின் உச்சத்தைத் தொட்ட தோனியின் பிறந்தநாள் இன்று

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 7, 2020, 09:55 AM IST
  • தோனியின் 39வது பிறந்தநாள் இன்று
  • டிரெண்டாகும் #HappyBirthdayDhoni என ஹேஸ் டேக்
  • “ஹெலிகாப்டர் 7 புறப்பட்டது! தோனிக்கு மரியாதை செய்த டுவைன் பிராவோ, ஹேப்பி பர்த் டே தோனி"
Happy Birthday Dhoni: கிரிக்கெட் நாயகன் தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் title=

மகேந்திர சிங் தோனி என்பதை விட தோனி என்று அழைப்பதே மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள்.

ராஞ்சியில் பிறந்த மகேந்திர சிங் தோனி, கிரிக்கெட் கனவுகளை சுமந்துக் கொண்டே, டிடிஆராக பணிப்புரிந்துக் கொண்டிருந்தா. வாழ்வின் பல பால பாடங்களை பால்ய வயதிலேயே கற்றுக் கொண்டு இந்திய கிர்க்கெட்டில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் தோனி. உலகப் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரராக இருந்தாலும், பக்குவப்பட்ட மனிதன் தோனி.

வெற்றி தோல்வி என இரண்டையுமே சரியாக கையாளத் தெரிந்த தோனியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.   சமூக வலைத்தளங்களில் இன்று தோனி தான் டிரெண்ட்.  அவர் தொடர்பான செய்திகள் வைரலாகின்றன. 

இந்திய கிரிக்கெட் அணியை லாவகமாக கையாண்டு, சக வீரர்களுக்கு உரிய மரியாதையும் வாய்ப்பையும் வழங்கிய தோனி பலருக்கும் நண்பராக இருக்கிறார்.  தோனி, ஒரு நல்ல நண்பர் மட்டுமல்ல, ஒரு சிறந்த கணவன், அன்புள்ள அப்பா என்று எல்லா பரிமாணங்களிலும் சிறப்பாக பரிமளிக்கிறார். இப்படி நல்ல மகனாக, கணவனாக, அப்பாவாக, சகோதரனாக, விளையாட்டு வீரனாக அனைவராலும் மதிக்கப்படும் மகேந்திர சிங் தோனி 1981ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி ராஞ்சியில் பிறந்தவர். 

இன்று அவரது ரசிகர்கள் ஹேப்பி பர்த்டே தோனி #HappyBirthdayDhoni என ஹேஸ் டேக் உருவாக்கியுள்ளனர். அது அளவில் சமூக ஊடகங்களில் டிரெண்டிங் ஆகிவருகிறது. 

முன்னாள் கேப்டன் தோனிக்கு பிற கிரிக்கெட் வீரர்களை விட ரசிகர் பட்டாளம் அதிகம். ஏன் இருக்காது? கிரிக்கெட்டின் 3 உலகக் கோப்பைகளையும் பெற்றுத் தந்தை ஒரே கேப்டன் தோனி, தனது இயல்பான சுபாவத்தால் ‘கூல் கேப்டன்’ என அழைப்பட்டார்.

தோனியை பெருமைப்படுத்தும் விதத்தில் அவருடைய பிறந்தநாளுகாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீடியோ வெளியிட்டு சிறப்பாக கொண்டாடியுள்ளது.  

எம்.எஸ்.தோனியின் பிறந்தநாள் பரிசாக மேற்கிந்திய தீவுகள் அணியின் டுவைன் பிராவோ எழுதிய பாடல் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகிறது.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் நேற்று இரவு வெளியிடப்பட்ட இந்தப் பாடலுடன்,  “ஹெலிகாப்டர் 7 புறப்பட்டது! தோனிக்கு மரியாதை செய்த டுவைன் பிராவோ, ஹேப்பி பர்த் டே தோனி" என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பதிவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, பத்மஸ்ரீ விருது, பத்ம பூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் தோனி பெற்றிருக்கிறார். இந்திய ராணுவத்தின் கௌரவ துணைநிலை கர்னல் பதவி என்ற கெளரவத்தையும் பெற்றிருக்கும் மகேந்திர சிங் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!!!

Trending News