இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று நாக்பூரில் நடைபெற்று வருகிறது.
நாக்பூரில் இருந்து மும்பை சென்று கொண்டிருந்த ஜெட்ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானத்தில் இரண்டு பணிப் பெண்களுக்கு இளம் தொழிலதிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
23-வயதான ஆகாஷ் குப்தா என்ற அந்த தொழிலதிபர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அந்த பணிப்பெண்கள் கடிதம் மூலம் கேப்டனுக்கு புகார் தெரிவித்துள்ளனர்.
புகாரை பெற்றுக் கொண்ட கேப்டன் கோபால் சிங், மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெறும் இந்திய ராணுவ பணியாளர் தேர்வுக்கான வினாத்தாள் தேர்வுக்கு முன்னரே வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தானே குற்றப்பிரிவு காவல்துறையினர் ராணுவ தேர்வு வினாத்தாள் வெளியாகியுள்ளது என்ற தகவல் கிடைத்ததை அடுத்து நேற்று இரவு நாடு முழுவதும் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர், புனே, நாசிக் மற்றும் கோவா ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் போது நடத்திய விசாரணையில் மாணவர்கள் 2,00,000 ரூபாய் கொடுத்து வினாத்தாளை வாங்கி, லாட்ஜில் அதற்கான விடைகளை எழுதியது தெரியவந்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கிடையேயான டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.