Hair Care: ஊட்டச்சத்து குறைபாடு, அதிகப்படியான மன அழுத்தம், நீங்கள் பயன்படுத்தக்கூடிய முடி பராமரிப்பு பொருட்கள், மரபணு காரணங்கள், உள்ளிட்ட பல காரணங்களால் சிலருக்கு அதிகப்படியாக முடி உதிர்வு ஏற்படும்.
இன்றைய காலகட்டத்தில், இளைஞர்களும் வெள்ளை முடியால் சிரமப்படுகிறார்கள், இதனால் அவர்கள் மிகவும் சங்கடங்களைச் சந்திக்க நேரிடுகிறது, ஆனால் இந்த வீட்டு வைத்தியம் மூலம், நீங்கள் இயற்கையாகவே கருப்பான முடியை பெறலாம்.
பொடுகு தொல்லையா அதிகமாகும் போது இரசாயன ஷாம்புகளை பயன்படுத்துவதை தவிர்த்து நல்லது. பொதுவாக இயற்கை வைத்தியம் மேற்கொள்வது மிக நல்லது.
வேப்பிலை, துளசி ஆகியவற்றை சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து சிறிதுநேரம் கழித்து குளிக்க வேண்டும்.
தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் பொடுகுத் தொல்லைகள் தீரும்.
வசம்பை தேங்காய் எண்ணெயில் போட்டு ஊறவைத்து அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வந்தால் பொடுகுத் தொல்லைகள் குறையும்.
தயிர் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகுத் தொல்லைகள் நீங்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.