கூந்தல் பராமரிப்பு குறிப்புகள்: பெரும்பாலான பெண்கள் நீண்ட கூந்தலைப் பெற பல வழிகளில் முயற்சி செய்கிறார்கள். சிலருக்கு முடி உதிரும் பிரச்சனை அதிகமாக உள்ளது. சிலருக்கு கூந்தலில் வலிமை இல்லாமல் இருக்கும்.
முடி உதிர்வுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஊட்டச்சத்து குறைபாடு, அதிகப்படியான மன அழுத்தம், நீங்கள் பயன்படுத்தக்கூடிய முடி பராமரிப்பு பொருட்கள், மரபணு காரணங்கள், உள்ளிட்ட பல காரணங்களால் சிலருக்கு அதிகப்படியாக முடி உதிர்வு ஏற்படும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டாலும் சிலருக்கு தீர்வு கிடைப்பதில்லை. இருப்பினும் சில விஷயங்களைக் கவனித்து, தேவையான சில குறிப்புகளை பின்பற்றினால், முடியை நீளமாக வளர்க்கலாம். கூந்தல் பராமரிப்பு பற்றிய சில முக்கிய விஷயங்களை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
உச்சந்தலையை கவனித்துக்கொள்ளவும்
முடி வளர்ச்சியை மேம்படுத்த உச்சந்தலையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நீங்கள் உங்கள் கூந்தலுக்கு ஷாம்பு செய்யும்போதெல்லாம், லேசாக கைகளால் உச்சந்தலையில் மசாஜ் செய்யவும். இப்படி பசாஜ் செய்யும்போது முடி பலப்படுகிறது, இரத்த ஓட்டமும் மேம்படுத்துகிறது.
உணவிலும் கவனம் செலுத்துங்கள்
சரியான உணவை எடுத்துக் கொள்ளாததால் முடி வளர்ச்சியும் நின்றுவிடும். ஆகையால், ஆரோக்கியமான கூந்தலைப் பெற, நீங்கள் உங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் முடி முறிவு கூட ஏற்படும். இது தவிர, இன்னும் பல வகையான பிரச்சனைகளையும் நீங்கள் சந்திக்க நேரிடலாம். கொலாஜன் மற்றும் புட்டோடின் போன்ற சத்துக்களை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க | Fatty Liver: சர்க்கரை அதிகம் சாப்பிடுகிறீர்களா; இந்த செய்தி உங்களுக்குத் தான்
முடியை ஈரப்பதமாக வைத்திருங்கள்
கூந்தல் வளர்ச்சிக்கு, உங்கள் முடியின் வறட்சியைக் குறைப்பது மிக முக்கியமாகும். இதற்கு தலைக்கு குளிப்பதற்கு முன்னர் கூந்தலுக்கு எண்ணெய் தடவ வேண்டும். இதனால், தலைமுடியைக் கழுவிய பின் அது வறண்டு போகாமல் இருக்கும். வாரம் ஒருமுறை தலைமுடிக்கு எண்ணெய் மசாஜ் செய்யலாம். இது தவிர, கூந்தலை அவ்வப்போது சிறிது வெட்டுவதும் அவசியம். இப்படி செய்தால் கூந்தல் நன்றாக வளரும்.
ஈரமான முடியில் சீப்பை பயன்படுத்த வேண்டாம்
மேலும், ஈரமான கூந்தலில் ஒருபோதும் சீப்பை பயன்படுத்தாதீர்கள். இதனால் கூந்தலில் சிக்கல் ஏற்பட்டு பிரச்சனைகள் ஏற்படலாம். இப்படி செய்தால், தலைமுடி உடைந்துவிடும். இது மிகவும் சாதாரண விஷயமாக தோன்றினாலும், இப்படிப்பட்ட சிறிய விஷயங்களிலும் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க வேண்டுமா: இரவில் இந்த உணவுகளை தவிர்த்தால் போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR