சசிகலாவுக்கு சிறப்பு சலுகைள் அளிக்க 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் புகார் குறித்த விசாரணைக்குத் தயார் என சிறைத்துறை அதிகாரி டிஜிபி சத்யநாராயணா கூறியுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் கர்நாடக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த 23-ம் தேதி சிறைத்துறை டிஐஜியாக ரூபா பதவி ஏற்றார். இதையடுத்து அவர் மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளுக்கு விசிட் அடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் திடீர் சோதனை நடத்தினார்.
குடியரசு தலைவர், துணை ஜனாதிபதி, பிரதமர், மக்களவை சபாநாயகர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு மட்டுமே சிவப்பு சுழல்விளக்கு பொறுத்த அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு ஏப்ரல் 19-ம் தேதி தெரிவித்துள்ளது. மேலும் விஐபி-களுக்கு இந்த சலுகை கிடையாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
காவிரி விவகாரத்தில் உத்தரவை பின்பற்றாத கர்நாடகாவிற்கு சுப்ரீம் கோர்ட்டு இறுதி எச்சரிக்கை விடுத்து உள்ளது. அக்டோபர் 4-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு இருமாநில முதல்வர்களையும் அழைத்து பேசவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி நேற்று டெல்லியில் இரு மாநில அரசுகளையும் அழைத்து மத்திய மந்திரி உமாபாரதி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் ஏற்படவில்லை.
தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதாவின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடரந்து கண்காணித்து வருகின்றனர்.
ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அப்பல்லோ மருத்துவமனை முன்பு அதிமுக மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் திரண்டனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார்.
டில்லியில் நேற்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதியை சந்தித்த சித்தராமைய்யா, காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவின் நிலைப்பாட்டை விளக்கியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் எனவும் சித்தாராமையா வலியுறுத்தியுள்ளார்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் 21-ம் தேதி முதல் வரும் 27-ம் தேதி வரை தமிழகத்துக்கு நொடிக்கு 6 ஆயிரம் கன அடி காவிரி நீரைக் கர்நாடகா திறக்க வேண்டும். 4 வாரத்துக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதற்கு கர்நாடகாவில் உள்ள அரசியல் கட்சிகளும், கன்னட அமைப்பினரும், விவசாய சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
காவிரியில் செப்டம்பர் 21 முதல் செப்டம்பர் 27-ம் தேதி வரை தமிழகத்திற்கு நாள்தோறும் 6000 கனஅடி நீர் திறந்து விட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
காவிரியில் விவகாரத்தில், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து, நாளை தமிழகம் முழுதும் முழு கடையடைப்பு போராட்டம் நடக்க உள்ளது. இவ்வேலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்து, கர்நாடகாவில் வன்முறை வெடித்து உள்ளது. கர்நாடகாவில் தமிழர்களை மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. துணை ராணுவப்படை அனுப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பெங்களூரு மற்றும் மைசூரு நகரங்களில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும். ஆனால் அணையில் நீர்மட்டம் மிகவும் குறைவாக இருந்ததால் தமிழக அரசு சம்பா சாகுபடிக்காக காவிரியில் 50 டி.எம்.சி. கர்நாடகம் தண்ணீர் திறந்து விடுமாறு சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தமிழகத்துக்கு 10 நாட்களுக்கு 15 ஆயிரம் கன அடிவீதம் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
தமிழகத்துக்கு 10 நாட்களுக்கு 15 ஆயிரம் கன அடிவீதம் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து, கர்நாடகாவில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது. பஸ்கள் இயக்கப்படவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பு கர்நாடகத்தில் விவசாயி களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
கர்நாடக முதல்வர் சித்தராமைய்யாவின் மகன் ராகேஷ் பெல்ஜியத்தில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
பிறந்த நாளை கொண்டாட பெல்ஜியம் சென்ற அவர் கணைய அலட்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்த ராகேஷ், பெல்ஜியத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் இன்று பிற்பகல் உயிரிழந்தார். கணையம் முற்றிலுமாக செயலிழந்து விட்டதை அடுத்து அவரது உயிர் பிரிந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.