புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் நிலவும் கொந்தளிப்பான சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு காபூலில் உள்ள இந்திய தூதரும், தூதரக ஊழியர்களும் உடனடியாக தாயக திரும்ப முடிவு செய்துள்ளதாக என்று வெளியுறவு அமைச்சகம் (MEA) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
"நிலவும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, காபூலில் உள்ள நமது இந்திய தூதரும் தூதரக ஊழியர்களும் உடனடியாக இந்தியாவுக்கு திரும்ப முடிவு செய்யப்பட்டுள்ளது," என்று பாகி ஒரு ட்வீட் மூலம் தகவல் அளித்துள்ளார்.
In view of the prevailing circumstances, it has been decided that our Ambassador in Kabul and his Indian staff will move to India immediately: MEA Spokesperson Arindam Bagchi
(file photo) pic.twitter.com/QFXWeRxbwB
— ANI (@ANI) August 17, 2021
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை தலிபான்கள் (Taliban) கையகப்படுத்தியதைத் தொடர்ந்து அங்கு நிலவும் கொந்தளிப்பான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு காபூலில் இருந்து இந்திய தூதர் மற்றும் பிற பணியாளர்களை தாயகம் அழைத்து வரை இந்திய விமான படை விமானம் புறப்பட்டது.
இந்திய விமானப்படை (IAF) சி -17 ஹெவி-லிப்ட் விமானம் திங்களன்று இந்தியாவுக்கு சில பணியாளர்களை அழைத்து வந்தது. செவ்வாய்க்கிழமை அனுப்பப்படும் விமானம் இரண்டாவது விமானம் என்று செய்தி நிறுவனம் PTI தெரிவித்துள்ளது.
ALSO READ | தாலிபன் அரசுக்கு ஆதரவாக நட்புக்கரம் நீட்டும் சீனா! இந்தியாவுக்கு சிக்கல்
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஆப்கானியர்களுக்கான ‘e-Emergency X-Misc Visa’ என்ற புதிய வகை மின்னணு விசாவையும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் திங்களன்று காபூலின் முக்கிய விமான நிலையத்தில் கூட்டம் கூட்டமாக திரண்டு வந்தனர். தலிபான்களிடமிருந்து தப்பிக்கும் நோக்குடன் அவர்கள், முண்டியடித்து கொண்டு விமானத்தில் கூட்டமாக ஏறிய போது, விமானத்தின் இறக்கையில் தொற்றிக் கொண்ட மூவர் கீழே விழுந்து இறந்த காட்சிகள் வைரலாகின.
ஆப்கானிஸ்தான் தாலிபான் வசம் சென்ற பிறகு, ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி (Ashraf Ghani) அங்கிருந்து விமானம் மூலம் தப்பிச் சென்று விட்டார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR