சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடி வன்முறை சம்பவம் தொடர்பான அறிக்கையை சட்டபேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தக்கால் செய்தார். மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து அமைதி நிலவ ஒத்துழைக்க வேண்டும் வேண்டும் என்றும், பொதுமக்கள் உணர்ச்சி வசப்படாமலும் யாருடைய தூண்டுதலுக்கு ஆளாகாமலும் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையடுத்து, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து கொண்டார்.
இது தொடர்பாக தொடர்ந்து பேசிய அவர்,,,!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு திமுகவே காரணம். கீதா ஜீவன் தலைமையில் நடந்த பேரணியின்போதுதான் வன்முறை ஏற்பட்டது. 99 நாள் நடந்த மக்கள் போராட்டத்தில் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. தடை உத்தரவு பிறப்பித்த நிலையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பாவிகளின் ஊர்வலத்தால் திமுகவினர் பயன்பெற்றனர். தமிழக அரசுக்கு சில கட்சிகள் நெருக்கடி கொடுப்பதாக நான் திமுகவைத்தான் குறிப்பிட்டேன். தூத்துக்குடி மக்களின் 22 ஆண்டுகால போராட்டத்துக்கு தீர்வு கிடைத்துள்ளது. விரும்பத்தகாத சூழல் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.