எம்ஜிஆர் நூற்றாண்டு விழா! 67 ஆயுள் கைதிகள் இன்று விடுதலை!!

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகள் தண்டனைக் காலத்தை நிறைவு செய்த 67 ஆயுள் கைதிகளை விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது!

Last Updated : Jun 6, 2018, 11:33 AM IST
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா! 67 ஆயுள் கைதிகள் இன்று விடுதலை!! title=

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகள் தண்டனைக் காலத்தை நிறைவு செய்த 67 ஆயுள் கைதிகளை விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது!

கடந்த பிப்ரவரி 25ஆம் தேதியுடன் 10 ஆண்டுகள் தண்டனைக் காலம் நிறைவு செய்த 67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவர் செய்யப்படுவதாக தமிழக அரசு சட்ட சபையில் தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் இன்று அனைவரும் புழல் சிறையில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட உள்ளனர். 

இது தொடர்பாக தமிழக அரசு முன்னதாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 25.02.18 அன்று 10 ஆண்டுகள் தண்டனை நிறைவு பெற்றவர்களில் முதல்கட்டமாக 67 பேர் விடுதலை செய்யப்படுகின்றனர். கவர்னருக்கு உள்ள அதிகாரத்தின்படி, சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் வழிகாட்டுதலின்படி இவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர் என்றது. 

அதன்படி சென்னை புழல் சிறையில் இருந்து அவர்கள் இன்று காலை விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சிறைத்துறை மேற்கொண்டு வருவதாகவும் சிறைத்துறை டிஐஜி முருகேசன் தெரிவித்துள்ளார்.

Trending News