TN Assembly!ஸ்டெர்லைட் ஆலையை இனி திறக்க முடியாது: முதல்வர்!

ஸ்டெர்லைட் ஆலையை இனி யார் நினைத்தாலும் திறக்க முடியாது என்று சட்டப்பேரவையில் முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்!  

Last Updated : Jun 4, 2018, 12:35 PM IST
TN Assembly!ஸ்டெர்லைட் ஆலையை இனி திறக்க முடியாது: முதல்வர்! title=

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி சட்டசபை கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக அறிவித்திருந்தது. ஆனால் தோழமை கட்சித் தலைவர்கள் திமுக சட்டசபைக்கு செல்ல வேண்டும் என வலியுறுத்தினர். இதை ஏற்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் இன்று சட்டசபை கூட்டத்தில் பங்கேற்றனர்.

தூத்துக்குடி விவகாரம் குறித்து அப்போது பேசிய மு.க.ஸ்டாலின்,,,! மக்களை பலியிட்டு தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியாது என்றார். தமிழ்நாட்டில் தாமிர உருக்கு ஆலை வேண்டாம் என தீர்மானம் போட்டு சட்டம் இயற்ற வேண்டும் என்றார். ஸ்டெர்லைட் ஆலை செலுத்திய ரூ.100 கோடி அபராதத் தொகை எங்கே என்றும் ஸ்டாலின் கேள்வி கேட்டார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின்போது உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் தேவை என்று, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். 

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டெர்லைட் ஆலையை இனி யார் நினைத்தாலும் திறக்க முடியாது என்று சட்டப்பேரவையில் முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு கொடுக்கப்பட்ட அனைத்து உரிமங்களும் ரத்து செய்யப்பட்டு நிரந்தரமாக மூடி சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர், போராட்டத்தில் ஈடுபட்ட விஷமிகள், சமூக விரோதிகளை தான் போலீஸ் தேடி வருகிறது. உருட்டுக்கட்டைகள்,பெட்ரோல் குண்டுகளுடன் வந்தவர்கள் பொதுமக்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Trending News