தமிழக சட்டசபை கூட்டத்தொடர் சபாநாயகர் தலைமையில் இன்று காலை 10-மணிக்கு தொடங்கி தற்போது நடந்து வருகிறது. இது இந்த வருடத்தில் நடக்கும் இரண்டாவது கூட்டத்தொடர் ஆகும்.
இந்த சட்டசபை கூட்டுத் தொடரில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து திமுக விவாதம் செய்தது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும் என்று கேட்டுக்கொண்டதையடுத்து, திமுகவின் சட்டசபை ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் நிராகரித்தார். இதையடுத்து, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது.
இதையடுத்து, வெளியில் வந்து பத்திரிகையாளர்களிடம் அவர் கூறும்போது...!
முதல்வர் அறிக்கையில், துப்பாக்கிச்சூடு என்ற வார்த்தை இல்லை. தனியார் ஆலைக்காக துப்பாக்கிச்சூடு நடத்தியது ஏன்? துப்பாக்கிச்சூடு குறித்து வேதனை தெரிவிக்க முதல்வருக்கு 5 நாட்கள் தேவைப்பட்டது. போராட்டக்காரர்களை சமூக விரோதிகள் என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
சீரூடை அணியாத போலீசாரும் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். துப்பாக்கிச்சூடு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். முதல்வர் பதவி விலகும் வரை சட்டசபையை திமுக புறக்கணிப்பதாக கூறினார்.
On the behalf of opposition, we demand that CM Edappadi K Palaniswami should resign. This is also what the people want: MK Stalin, DMK Working President. #SterliteProtests pic.twitter.com/DSH0HIcxgO
— ANI (@ANI) May 29, 2018