திருச்சி பொன்மலை அருகே பல்லவன் ரயில் விபத்துக்குள்ளானது!

திருச்சி பொன்மலை அருகேயுள்ள கிராப்பட்டியில், பல்லவன் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது!

Updated: Apr 25, 2018, 09:14 AM IST
திருச்சி பொன்மலை அருகே பல்லவன் ரயில் விபத்துக்குள்ளானது!

திருச்சி: திருச்சி பொன்மலை அருகேயுள்ள கிராப்பட்டியில், பல்லவன் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது!

காரைக்குடியில் இருந்து சென்னை சென்னை செல்லும் பல்லவன் விரைவு ரயில் திருச்சி பொன்மலை அருகேயுள்ள கிராப்பட்டியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் 10 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விபத்தின் காரணமாக காலை 6.40 மணிக்கு திருச்சி ஜங்ஷன் வரவேண்டிய பல்லவன் ரயில் கிராப்பட்டியிலேயே நின்றுள்ளது. ரயில் என்ஜினை சரிசெய்யும் பணி நடைப்பெற்று வருகிறது.

இச்சம்பவம் குறித்து ரயிலில் பயணித்த பயணிகள் தெரிவிக்கையில், பெரிய சேதத்தினை ஏற்படுத்தவிருந்த இவ்விபத்தானது ஓட்டுநரின் துரித நடவடிக்கையாள் தவிர்க்கப்பட்டது. எனினும் ரயில் தற்போது பழுது காரணமாக ஒரே இடத்தில் நின்று இருப்பதால் போக்குவரத்திற்கு பெரும் துயரத்தினை அனுபவித்து வருகின்றோன் எனவும் தெரிவித்துள்ளனர்!