தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலி: ஐ.நா கண்டனம்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு ஐ.நா மனித உரிமை வல்லுநர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

Last Updated : Jun 1, 2018, 10:53 AM IST
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலி: ஐ.நா கண்டனம்! title=

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு ஐ.நா மனித உரிமை வல்லுநர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

கடந்த 1996-ம் ஆண்டு தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை இயங்கி வந்தது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் பொதுமக்கள் சார்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இதனால் இந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தார்கள். இந்த போராட்டத்தின் நூறாவது நாள் கடந்த 22-ம் தேதி எட்டியது. அப்போது போராட்டக்காரர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். படுகாயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு ஐ.நா மனித உரிமை வல்லுநர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மனித உரிமை, சுற்றுச்சூழலுக்காக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் துப்பாக்கிச்சூடு குறித்து சுதந்திரமான, வெளிப்படையான விசாரணையை காலதாமதமின்றி நடத்தவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Trending News