அதிசயம்! 5 ஆண்டுகள் கோமாவில் இருந்த பெண்... குணமாக்கிய தாயின் ஜோக்!

அமெரிக்காவில் கோமாவில் இருந்த பெண் ஒருவர் தாயின் நகைச்சுவை கேட்டு சிரித்தபடி கோமாவில் இருந்து விழித்த சம்பவம், பெரும் நெகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 6, 2024, 08:24 PM IST
  • 2022 ஆகஸ்ட் மாதம் தான் அதிசய சம்பவம் நிகழ்ந்தது.
  • 2017 ஆம் ஆண்டு நடந்த கார் விபத்து.
  • கால்பந்து விளையாடுவதற்கு தொடர்ந்து மிகவும் ஊக்கம் கொடுத்து வந்த ஜெனிபர்.
அதிசயம்! 5 ஆண்டுகள் கோமாவில் இருந்த பெண்... குணமாக்கிய தாயின் ஜோக்! title=

அமெரிக்காவில் கோமாவில் இருந்த பெண் ஒருவர் தாயின் நகைச்சுவை கேட்டு சிரித்தபடி கோமாவில் இருந்து விழித்த சம்பவம், பெரும் நெகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கார் விபத்தில் அடிபட்டதால கோமாவிற்கு சென்ற ஜெனிஃபர் ஃப்ளெவெல்லன் (Jennifer Flewellen) தனது தாயின் ஜோக்கை கேட்டு சிரித்தபடி விழித்தார்.

2017 ஆம் ஆண்டு நடந்த கார் விபத்து

கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அமெரிக்காவின் மெச்சிகன் (Michigan) பகுதியைச் சேர்ந்த ஜெனிஃபர் என்ற பெண் கார் விபத்தில் படுகாயம் அடைந்து கோமா நிலைக்குச் சென்றார். மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். அவரது தாயான பெகி மீன்ஸ் (Peggy Means) என்பவர் மனம் தளராமல், தனது மகளுக்கு, சேவைகளை செய்து நம்பிக்கையுடன் காத்திருந்தார். அவரது நம்பிக்கையும் கனவும் ஒரு நாள் பலித்தது. மூடி இருந்த கதவுகள் திறந்தன. ஆம்... ஒரு நாள் படுக்கையில் இருந்த ஜெனிஃபர் தனது தாய் சொன்ன ஜோக்கைக் கேட்டபோது சிரித்தபடி கண் விழித்தார்.

சிரிப்பைக் கேட்டு முதலில் அச்சமடைந்த தாய்

ஐந்து வருடமாக கோமாவில் இருந்த மகள் எப்பொழுது கண் திறப்பாள் என்று காத்துக் கொண்டிருந்த போதிலும், அவள் திடீரென சிரித்தபடி எழுந்தது, தாய்க்கு முதலில் அச்சத்தை கொடுத்தது. ஏனென்றால், அவள் அவ்வாறு எப்போதுமே சிரித்ததில்லை என்று அந்த தாய் கூறுகிறாள். 2022 ஆகஸ்ட் மாதம் தான் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

மேலும் படிக்க | உலகின் மிக ஏழ்மையான நாடுகள் எவை தெரியுமா? எண்ணெய், தங்கம் அதிகம்..!

ஜெனிஃபருக்கு தொடரும் சிகிச்சை

ஜெனிபர் என்ற பெயர் கொண்ட அவரது மகள் கண் விழித்தாலும் முழுமையாக குணமாகவில்லை. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதலில் அவர் அதிக நேரம் தூங்குவதாக கூறிய பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய், இப்போது அவர் விழித்திருக்கும் நேரம் அதிகமாக இருப்பதாகவும், கொஞ்சம் கொஞ்சமாக உடல் வலுப்பெற்று வருவதாகவும் நம்பிக்கை தெரிவித்தார். ஜெனிஃபருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் அவரது உடல்நிலை குறித்து கூறுகையில், அவர் கண்விழித்தது மட்டுமில்லாமல், அவரது உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும், இது மிகவும் அபூர்வமான இது மிகவும் அபூர்வமான சம்பவம் என்றும் குறிப்பிட்டார்.

ஜெனிபரின் 17 வயது மகன்

கோமாவில் இருந்து மீண்டிருக்கும் ஜெனிபரின் மகனான ஜூலியன், தனது அன்னையைப் பற்றி தெரிவிக்கையில், தான் கால்பந்து விளையாடுவதற்கு தொடர்ந்து மிகவும் ஊக்கம் கொடுத்து வந்தார் என்று தெரிவித்தார். ஜெனிபர் கோமாவில் சென்ற போது அவரது மகனுக்கு 11 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெனிபரிக்கு உதவ தொடங்கப்பட்ட GoFundMe இயக்கம்

கோமாவில் இருந்து கண் விழித்தாலும், இன்னும் முழுமையாக குணமடையாத நிலையில், அவரது பேச்சு மற்றும் உடல் இயக்கத்தை மேம்படுத்தவும் பழைய நிலையை அடையவும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, அவருக்கு உதவ மாற்றுத்திறனாளிகளுக்கான வேன் மற்றும் மாற்றுத் திறனாளிகள் எளிதாக வீட்டில் இயங்குவதற்கான சில வசதிகளையும் செய்ய, GoFundMe  என்னும் இயக்கம் மூலம் உதவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜெனிஃபரின் தாயும், அவருக்கு தொடர்ந்து சேவைகளை செய்து வருகிறார். அந்த தாயின் எதிர்ப்பார்ப்பும், ஆசையுன் நிச்சயம் நிறைவேறும். அவரது மகள் அவருடம் எழுந்து நடப்பாள் என்ற நம்பிக்கை அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பாகிஸ்தான் பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 8! ஆனால் முடிவுகள் எப்போது வெளியாகும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News