Afghanistan Taliban crisis: ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் முழுமையாக கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதை அடுத்து, அங்கு நிலைமை மிகவும் பதற்றமாக உள்ளது. தாலிபான்கள் கொடுங்கோல் ஆட்சிக்கு அஞ்சி, அங்கிருந்து மக்கள், அங்கிருந்து வெளியேற விமான நிலையத்தில் அலை மோதும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதை அடுத்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தொடர்ந்து விளையாடுமா, வரவிருக்கும் டி 20 உலகக் கோப்பையில் பங்கேற்குமோ போன்ற பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இப்போது அங்கே கிரிக்கெட் அணி நிலை என்ன என்ற அச்சம் எழுந்துள்ளது
இது குறித்து கூறிய ஆப்கானிஸ்தான் (Afghanistan) கிரிக்கெட் வாரியம், நெருக்கடி மற்றும் கொந்தளிப்பு நிலை இருந்தபோதிலும், 2021 டி 20 உலகக் கோப்பை துபாயில் நடக்கும்போது , ஆப்கான் அணி அதிக் பங்கேற்க தயாராக இருக்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளது.
ANI செய்தி நிறுவனத்துடன் பேசிய ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஊடக மேலாளர் ஹிக்மத் ஹாசன், டி 20 உலகக் கோப்பையில் ஆப்கான் அணி பங்கேற்பதில் எந்த சந்தேகமும் இல்லை என கூறியுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான முத்தரப்பு தொடரில் பாங்கேற்பதற்கும் ஆப்கான் கிரிக்கெட் வாரியம் ஆர்வமாக உள்ளது என்றார்
ஆப்கான் கிரிக்கெட் வாரியத்தின் வாரிய அதிகாரிகள் ரஷீத் கான் அல்லது முகமது நபி ஆகியோர் தற்போது ஆப்கானில் இல்லாததால், அவர்களுடன் தொடர்பு கொண்டீர்களா என்று கேட்டதற்கு, அவர் "நாங்கள் எங்கள் கிரிக்கெட் வீரர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் உதவ எப்போதும் தயாராக இருக்கிறோம். அவர்களுக்கு எங்களால் முடிந்ததை நாங்கள் நிச்சயம் செய்வோம். காபூலில் நிலைமை அதிகம் பாதிக்கப்படவில்லை, நாங்கள் ஏற்கனவே அலுவலகத்திற்கு திரும்பிவிட்டோம், அதனால் கவலைப்பட ஒன்றுமில்லை. " என்றார்
எனினும், ஆப்கான் கிரிகெட் அணி குறித்த எதிர்காலம் என்ன என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். சிறிது காலம் சென்ற பிறகு சிறிது தெளிவான விடை கிடைக்கலாம்.
ALSO READ | தாலிபான் வசமாகும் ஆப்கானிஸ்தான்; இந்தியர்களை தாயகம் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR