2021 ஆம் ஆண்டில் உலகின் மிகச் சிறந்த 10 நகரங்கள்

நிலைத்தன்மை, கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல், கல்வி, சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய ஐந்து  பிரிவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்த பின் தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 11, 2021, 12:06 PM IST
  • 2019 நடத்திய ஆய்வில், நான்காவது இடத்தில் இருந்த ஜப்பானில் ஒசாகா இந்த ஆண்டு இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
  • ஆஸ்திரேலியாவின் நான்கு நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது
2021 ஆம் ஆண்டில் உலகின் மிகச் சிறந்த 10 நகரங்கள் title=

புதுடில்லி: COVID-19 தொற்றுநோய் அனைவரின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுள்ள நிலையில், உலகில் வாழ்வது சிறந்த இடம் உள்ளது என்பதே அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விஷயம் தான்.

மருத்துவ வசதி மற்றும் பிற அத்தியாவசிய வசதிகள், பாதுகாப்பு ஆகியவற்றில் அடிப்படையில் தங்குவதற்கு சிறந்த இடங்கள்  போன்ற அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு, 2021 இல்  வாழ்வதற்கு சிறந்த 10 நகரங்களின் பட்டியல் இங்கே:

எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் ( Economist Intelligence Unit ) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரம் தற்போது உலகின் சிறந்த நகரமாக முதல் இடத்தைப் பிடித்தது.

2019 நடத்திய ஆய்வில், நான்காவது இடத்தில் இருந்த ஜப்பானில் ஒசாகா இந்த ஆண்டு இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.  ஆஸ்திரேலியாவின் நான்கு நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது, அடிலெய்ட் மூன்றாம் இடத்தையும், பெர்த் ஆறாவது இடத்தையும், பிரிஸ்பேன் 10 வது இடத்தையும் பிடித்தன. மறுபுறம் மெல்போர்ன் சுவிட்சர்லாந்தில் ஜெனீவாவுடன் எட்டாவது இடத்தில் உள்ளது.

ALSO READ| ஆண்டிகுவா நடத்திய கடத்தல் நாடகம் தோல்வி: மெகுல் சோக்ஸியின் மனைவி 

உலகின் மிகச்சிறந்த முதல் 10 நகரங்கள் மற்றும் உலகளாவிய வாழ்வாதார அட்டவணை 2021 இன் படி அவற்றின் மதிப்பெண்கள்:

ஆக்லாந்து, நியூசிலாந்து (96.0)

ஒசாகா, ஜப்பான் (94.2)

அடிலெய்ட், ஆஸ்திரேலியா (94.0)

வெலிங்டன், நியூசிலாந்து (93.7)

டோக்கியோ, ஜப்பான் (93.7)

பெர்த், ஆஸ்திரேலியா (93.3)

சூரிச், சுவிட்சர்லாந்து (92.8)

ஜெனீவா, சுவிட்சர்லாந்து (92.5)

மெல்போர்ன், ஆஸ்திரேலியா (92.5)

பிரிஸ்பேன், ஆஸ்திரேலியா (92.4)

நிலைத்தன்மை, கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல், கல்வி, சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய ஐந்து  பிரிவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்த பின் தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ALSO READ | Power of words: 86 கோடி வார்த்தை பேசுவது யார் தெரியுமா..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News