ஹோட்டல்களில் நீங்கள் தங்கியிருக்கலாம். தங்கும் விடுதிகள் பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கலாம். ஐந்து நட்சத்திர ஹோட்டல் என்ன, ஏழு நட்சத்திர ஹோட்டல்களை விட இப்போது முக்கியத்துவம் பெறுகிறது ஒரு ஹோட்டல். அது எங்கிருக்கிறது தெரியுமா?
இதுவரை நீங்கள் கேள்விப்படாத ஹோட்டல் இது… பன்றிகளுக்கான ஹோட்டல்! ஆனால் அவற்றுக்கு சேவை செய்வதென்னவோ மனிதர்கள் தான்… இந்த விசித்திரமான ஹோட்டல் இருக்கிறது தெரியுமா?
பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் சீனாவில் தான் இந்த வித்தியாசமான ஹோட்டல் இருக்கிறது. இங்கு 10,000 பன்றிகள் உயர் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளன. இந்த இடத்திற்கு பன்றி விடுதி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
Also Read | மீண்டும் அதிகரிக்கும் தொற்று, முளைத்தது புதிய பிரச்சனை
தெற்கு சீனாவில், கிட்டத்தட்ட 10,000 பன்றிகள் 13 மாடி கட்டடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அங்கு யாருமே செல்லமுடியாது. பாதுகாப்பு கேமராக்கள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் சிறப்பு உணவுகள் என ஏற்பாடுகள் கவனமாய் செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய 'பன்றி ஹோட்டல்களின்' குறிக்கோள், சீனாவின் முக்கிய இறைச்சி ஆதாரமான பன்றிகளை நோயின்றி வைத்திருப்பதுதான்.
ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலான எபோலா வைரஸ் பரவலால் சீனாவில் வளர்க்கப்பட்ட பன்றிகளில் கிட்டத்தட்ட பாதி இறந்துபோயின. அதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தான் கொரோனா வைரஸ் தோன்றியது என்ற விஷயத்துடன் பன்றி ஹோட்டல்கள் இணைத்து பார்க்கப்படுகிறது.
Also Read | அதிர்ச்சி தகவல்! டேனிஷ் சித்திகி தாக்குதலில் இறக்கவில்லை; ‘படுகொலை’ செய்யப்பட்டார்
2018 இல் சீனாவில் ஒரு பெரிய தொற்றுநோயை உருவாக்கிய எபோலா ஒருவித ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் ஆகும். இது மனிதர்களை மட்டும் பலி வாங்கவில்லை, பன்றிகளையும் கொன்று குவித்தது.
ஒரே வருடத்தில் சீனாவில் இருந்த 400 மில்லியனுக்கும் அதிகமான பன்றிகளில் கிட்டத்தட்ட பாதி அழிந்துவிட்டன. இதன் விளைவாக சீனாவில் அதுவரை இல்லாத விலைவாசி உயர்வு மற்றும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பன்றி இறக்குமதி செய்யப்பட்டது.
தற்போதும் அந்த அச்சம் எழுந்துள்ள்து. ஜூலை 20ம் தேதியன்று சீனாவின் விவசாய அமைச்சகம் தெரிவித்த தகவல்களின்படி, 2021 ஆம் ஆண்டில் இதுவரை 11 பாதிப்புகள் பதிவாகின. அதனால் கிட்டத்தட்ட 2,000 பன்றிகளை கொல்லப்பட்டன.
Read Also | ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் வெறியாட்டம்; வீதிகளில் சிதறிக் கிடக்கும் சடலங்கள்
லேசான அறிகுறிகளை வெளிப்படுத்தும் மற்றும் நீண்ட காலம் பாதிப்பை ஏற்படுத்தும் நாவல் வைரஸ் திரிபு (novel strains) இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளதோ என சீனா கவலைப்படுகிறது.
2018 ஆகஸ்ட் மாதத்தில், ரஷ்யா - சீனா எல்லைப் பகுதியில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் இது ஒன்பது மாதங்களுக்குள் 31 முக்கிய நிலப்பரப்புகள், நகராட்சிகள் மற்றும் தன்னாட்சி பகுதிகளுக்கும் விரைவாக பரவியது.
இதன் விளைவாக 100 மில்லியனுக்கும் அதிகமான பன்றிகள் படுகொலை செய்யப்பட்டன, அத்துடன் பன்றி இறைச்சியின் விலையில் கணிசமான அதிகரிப்பும் ஏற்பட்டது.
Also Read | காந்தஹார் மீது ராக்கெட் தாக்குதல்; விமானங்கள் அனைத்தும் ரத்து
பிறகு அமெரிக்காவுடனான வர்த்தகப் Alபோரின் விளைவாக அமெரிக்க விவசாயத் தொழிலின் மாற்றுத் தேர்வுகள் கட்டுப்படுத்தப்பட்டன. 2018 ஆம் ஆண்டின் கணக்குப்படி, அந்த ஆண்டு உலகம் முழுவதும் உணவுக்காக பயன்படுத்தப்பட்ட பன்றி இறைச்சியில் பாதி அளவை சீனாவே உபயோகித்துள்ளது.
ஆனால் அதில் 95 சதவிகிதத்திற்கும் அதிகமான பன்றி மாமிசம் அந்நாட்டிலேயே கிடைத்தது. எஞ்சிய 5 சதவிகித பன்றிக்கறி தான் இறக்குமதி செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் தான் சீனா, பன்றிகளை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. எனவே, இனி தெருவில் சுற்றிக் கொண்டு சாக்கடையில் புரளும் பன்றியைக் பார்த்தால், பாவம் இது மிகவும் ஏழையான ஜீவன் என்று பரிதாபம் கொள்ளுங்கள். ஆனால் இணையத்தை பயன்படுத்தத் தெரியாத அதற்கு நவீன ஹோட்டல்களின் அனைத்து வசதிகளுடனும் தங்கள் சகாக்கள் தங்கியிருப்பது தெரியாது…
Also Read | ஸ்டீவ் ஜாப்ஸின் முதல் வேலை விண்ணப்ப படிவத்தின் ஏல மதிப்பு இவ்வளவா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR