பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வாங்கா. இவரது 12 வயதில் சூராவளியில் சிக்கி கண்பார்வையை இழந்தார். பார்வை பறிபோனாலும் கடவுள் தனக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தியை வழங்கியுள்ளதாக பாபா வாங்கா கூறி வந்தார். இவர் தனது 84-வது வயதில் 1996-ம் ஆண்டு காலமானார். இருப்பினும் உயிரிழப்பதற்கு முன்பு இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார்.
இவரது கணிப்புகளில் 68% அளவுக்கு நடந்துள்ளதாக நிபுணர்கள் கூறி வந்தாலும், அவரது ஆதரவாளரகள் அதற்கு மறுப்பு தெரிவித்து 85% அளவுக்கு நடந்தேறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல், 2022-ம் ஆண்டு புது விதமான வைரஸ் தாக்கும், தண்ணீர் பஞ்சம் ஏற்படும், டிஜிட்டல் புரட்சியால் மக்கள் நிஜத்திற்கும் கற்பனைக்கு வித்தியாசம் தெரியாமல் குழம்புவார்கள், காலநிலை மாற்றத்தால் விவசாய பயிர்களை வெட்டுக்கிளிகள் படையெடுத்து தாக்கக்கூடும், பூமிக்கு வேற்றுகிரகவாசிகளான ஏலியன்களின் அச்சுறுத்தல் இருக்கக்கூடும் என பல விஷயங்களை பாபா வாங்கா கணித்துள்ளார்.
மேலும் படிக்க | 2022 ஆம் ஆண்டு பயங்கரமாக இருக்கும்! இந்தியாவுக்கான பாபா வெங்காவின் கணிப்பு
இந்த நிலையில், தற்போது விளாடிமிர் புதின் மற்றும் ரஷ்யா குறித்து அவர் குறிப்பிட்டிருந்த கணிப்புகள் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. ரஷ்யா மற்றும் விளாடிமிர் புதின் சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என அவர் கணித்துள்ளார். ''பனிபோல் அனைத்தும் கரையும் ஆனால் ஒன்று மட்டும் தீண்டப்படாமல் இருக்கும் - விளாடிமிரின் மகிமை, ரஷ்யாவின் மகிமை'' என பாபா வாங்கா குறிப்பிட்டுள்ளார்.
இதுமட்டுமின்றி ரஷ்யாவை எவராலும் இனி தடுத்து நிறுத்த முடியாமல்போகும் எனவும் பாபா வாங்கா கணித்துள்ளார். மேலும், எதிர்படும் அனைத்தும் புதினால் அப்புறப்படுத்தப்படும் எனவும், கைப்பற்றிய அனைத்தையும் தக்கவைத்துக்கொள்வார் என்பதால் உலகையும் ஆள்வார் என அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் எதிர்காலம் மிகச் சிறப்பாக இருக்கும் என்றும், அது விளாடிமிர் புதின் காலத்தில் மகிமை பெரும் என்றும் பாபா வாங்கா சுட்டிக்காட்டியுள்ளார். உக்ரைன் மீதான போரில் ரஷ்ய படைகள் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் பாபா வாங்காவின் இந்த கணிப்புகளை புதின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க | முடிவுக்கு வருகிறது உக்ரைன் - ரஷ்யா போர் : நாள் குறித்த புதின்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR