கொரோனா வைரஸ்: சீனாவில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள் குறித்து இந்தியா எச்சரிக்கை

கொரோனா: வைரஸுக்கு இடையில் சீனாவில் சிக்கித் தவிக்கும் 25-300 இந்திய மாணவர்கள். அவர்களை திரும்ப அழைக்க இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 27, 2020, 08:51 AM IST
கொரோனா வைரஸ்: சீனாவில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள் குறித்து இந்தியா எச்சரிக்கை title=

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவதால், அங்கு சிக்கியுள்ள 250 மாணவர்கள் குறித்து கவலைப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, வுஹான் உட்பட சீனாவின் பல்வேறு பகுதிகளில் சிக்கியுள்ள மாணவர்களின் நலன்களை உறுதி செய்ய சீன அரசாங்கத்துடன் இந்தியா தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. மாணவர்களை காப்பாற்ற பரிசீலிக்கப்படுவதாக இந்தியா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவும் முக்கியமான பகுதி வுஹான் ஆகும். அதே நேரத்தில், இந்த புதிய கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளதாகவும், 23 வெளிநாட்டினர் உட்பட 2,008 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சீனாவின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிக்குத்தவிக்கும் 250 க்கும் மேற்பட்டவர்கள்:
அந்த நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பல பல்கலைக்கழகங்களில் சுமார் 700 இந்திய மாணவர்கள் படிக்கின்றனர் என்று கூறப்படுகிறது. வைரஸ் பரவாமல் தடுக்க சீன அதிகாரிகள் வுஹான் உட்பட 12 நகரங்களை முற்றிலுமாக மூடிவிட்டனர். இந்திய மாணவர்களில் பெரும்பாலோர் மருத்துவ மாணவர்கள், அவர்களில் பெரும்பாலோர் சில வாரங்களுக்கு முன்பு சீனப் புத்தாண்டு விடுமுறை காரணமாக வெளியேறினர். தகவல்களின்படி, 250 முதல் 300 மாணவர்கள் இன்னும் நகரத்தில் உள்ளனர். அவர்களை குறித்து பெற்றோர்களுக்கு கவலை அதிகரித்துள்ளது. பல பிஎச்டி மாணவர்கள் வுஹான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் படிக்கின்றனர். சில மாணவர்கள் ஜனவரி 23 அன்று நகரத்தை விட்டு வெளியேற முடிந்தது.

அவர்களை வெளியேற்றப்பட வாய்ப்பு:
சீனாவில் உள்ள இந்திய தூதரகம் "அவர்களை வெளியேற்ற அனைத்து வகையிலும் பரிசீலித்து வருவதாக" கூறியுள்ளதுடன், வுஹானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு நிவாரணம் வழங்க சீன அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறது. தூதரகத்தின் சார்பில் போடப்பட்ட ட்வீட்தில், "கடந்த இரண்டு நாட்களில், எங்கள் ஹாட்லைன் எண்களுக்கு இந்த கடினமான சூழ்நிலை தொடர்பாக 600 அழைப்புகள் வந்துள்ளன. பாதிக்கப்பட்ட குடிமக்களுக்கு நிவாரணம் வழங்க சீன அதிகாரிகளுடன் கலந்தாலோசிப்பது உட்பட அனைத்து திட்டங்களையும் இந்திய அரசாங்கமும் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகமும் பரிசீலித்து வருகின்றன. குறிப்பாக அங்கு உள்ள மாணவர்களை எப்படி வெளியேற்றுவது என ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. 

ஹெல்ப்லைன் நம்பர்கள் வெளியிடப்பட்டது:
பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா மூன்றாவது ஹெல்ப்லைன் சேவையைத் தொடங்கி உள்ளது. அற்க்குறித்து தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில், "கொரோனா வைரஸ் தொடர்பாக, பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அமைத்துள்ள இரண்டு ஹாட்லைன் எண்களுக்கு ஏராளமான தொலைபேசிகள் வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, +8618610952903 என்ற எண்ணில் மூன்றாவது ஹாட்லைன் சேவையை தொடங்க தூதரகம் முடிவு செய்துள்ளது. ஹாட்லைன் எண்கள் +8618612083629 மற்றும் +8618612083617 என்று தூதரகம் தெரிவித்துள்ளது.

குடியரசு தின கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டன:
வைரஸ் குறித்த கவலைகள் அதிகரித்து வருவதால், இந்திய தூதரகம் ஞாயிற்றுக்கிழமை அன்று குடியரசு தின கொண்டாட்டங்களை ரத்து செய்தது. திபெத் தவிர சீனாவின் ஒவ்வொரு பகுதியிலும் இந்த வைரஸ் அதிகமாக பரவுகிறது. அமெரிக்கா தனது தூதரக அதிகாரிகளையும், அந்நாட்டு மக்களையும் வுஹானிலிருந்து வெளியேற்ற அனுமதித்ததாகக் கூறப்படுகிறது. அமெரிக்க துணைத் தூதரகம் வுஹானில் உள்ளது மற்றும் வுஹானில் சுமார் 1,000 அமெரிக்க குடிமக்கள் இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக சீனா டெய்லி செய்தி தெரிவிக்கிறது. அதேபோல பிரான்ஸ் மற்றும் தென் கொரியாவும் வுஹானில் சிக்கித் தவிக்கும் தங்கள் குடிமக்களை வெளியேற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News