26 பேரைக் கொன்ற கொரோனா வைரஸ்; 14 நகரங்களுக்கு சீல்; 40 மில்லியன் மக்கள் வீடுகளில் சிறை

கரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பைக் கருத்தில் கொண்டு இதுவரை சீனாவின் 14 நகரங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. அங்கு உள்ள சுமார் 4.1 கோடி மக்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 25, 2020, 02:48 AM IST
26 பேரைக் கொன்ற கொரோனா வைரஸ்; 14 நகரங்களுக்கு சீல்; 40 மில்லியன் மக்கள் வீடுகளில் சிறை title=

பெய்ஜிங்: சீனாவில் பரவி வரும் கரோனா வைரஸ் காரணமாக, அங்குள்ள பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். இதுவரை குறைந்த பட்சம் 26 பேரைக் கொன்ற புதிய கொரோனா வைரஸால் மக்கள் மிகவும் பீதி அடைந்துள்ளனர் என செய்திகள் வருகிறது. மேலும் யாருக்கு இந்த வைரஸ் தாக்கி உள்ளது என்று தெரியாமல், ஒருவரையொருவர் சந்தேகத்துடன் பார்க்கப்படுவது மிகவும் கவலை அளித்துள்ளது. இந்த வைரஸ் அறிகுறிகள் பொதுவாக காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிக்கல் இருக்கும். சீனா முழுவதும் உள்ள நகரங்களின் போக்குவரத்து மையங்களில் சுகாதார சோதனைகளை கடுமையாக்கப்பட்டு உள்ளன.

14 நகரங்களுக்கு சீல்; 40 மில்லியன் மக்கள் வீடுகளில் சிறை:
கரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பைக் கருத்தில் கொண்டு இதுவரை சீனாவின் 14 நகரங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, இந்த நகரங்களில் சுமார் 4.1 கோடி மக்கள் வசிக்கின்றனர். இந்த வைரஸ் முதன் முதலில் நாட்டின் ஹூபே மாகாணத்தில் கண்டறியப்பட்டது. இது பரவாமல் தடுக்க, கடந்த 24 மணி நேரத்தில் ஹூபே மாகாணத்தில் உள்ள நகரங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.அதன் வரிசையில் சியானிங், சியோகான், என்ஷி மற்றும் ஜெஜியாங் ஆகிய நான்கு புதிய பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மூன்று வாரங்களுக்குள் குறைந்தது 10 பிராந்தியங்களில் 830 க்கும் அதிகமானவர்களை பாதித்துள்ளது. முதல் வழக்கு ஹூபேயின் தலைநகரான வுஹானில் இருந்து வந்தது.

10,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு இருக்கலாம்:
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை 10,000 க்கும் அதிகமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சுமார் 33 மில்லியன் மக்கள் வசிக்கும் சீனாவில் குறைந்தது 10 நகரங்கள் கடந்த இரண்டு நாட்களில் சீல் வைக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டு சாலைகள் மூடப்பட்டுள்ளன. கொடிய கொரோனா வைரஸ் நினைத்ததை விட மிகவும் ஆபத்தான தொற்றுநோயாகும் மற்றும் பாதிக்கப்பட்ட ஒருவர் அதை ஒரு எளிய இருமல் அல்லது தும்மினால் [பரவக்கூடியது.

சீனாவின் பெருஞ்சுவர் மற்றும் டிஸ்னிலேண்ட் மூடப்பட்டது:
இதற்கிடையில், சீனாவின் பெரிய சுவர் மற்றும் ஷாங்காயில் உள்ள டிஸ்னிலேண்ட் மூடப்பட்டதாக செய்தி வெளிவந்துள்ளது. இந்த இரண்டு இடங்களும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாகும். அதிக மக்கள் ஒரே இடத்தில் கூடாதபடியும், வைரஸ் பரவாமல் இருக்க நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது. அதே நேரத்தில், வுஹான் ரயில் நிலையம் அருகே ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மெக்டொனால்டு கடை மூடல்:
நாளை சீனாவில் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. உலகெங்கிலும் இருந்து மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் சொந்த வீடுகளை புத்தாண்டு கொண்டாட வருகை தர உள்ளனர். ஆனால் நாடு முழுவதும் பெரிய கொண்டாட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. பெய்ஜிங் மற்றும் ஹாங்காங்கில் கார்னிவல் தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஹூபேயில் உள்ள ஐந்து நகரங்களில் தனது கிளையை மூட மெக்டொனால்டு உத்தரவிட்டுள்ளது.

என்ன வைரஸ் இது?
இந்த வைரஸ் ஒரு புதிய வகை கொரோனா வைரஸாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ்கள் நோய்க்கிருமிகளின் ஒரு பெரிய குடும்பமாகும். அவற்றில் பெரும்பாலானவை ஜலதோஷம் போன்ற லேசான சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகின்றன. ஆனால் கொரோனா வைரஸ்களும் ஆபத்தானவை.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News