மக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசிகளைப் போடுவதற்கு அரசு நிர்வாகம் பிரம்ம பிரயர்த்தனம் செய்ய வேண்டியிருக்கிறது. சர்வ தேசங்களிலும் இதே நிலை தான். ஆனால், நியூ மெக்ஸிகோ நாடு செய்திருக்கும் அறிவிப்பு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
நியூ மெக்ஸிகோவின் ஆளுநர் மைக்கேல் லுஜன் கிரிஷாம் (Michelle Lujan Grisham) ஒரு லாட்டரி திட்டத்தை அறிவித்தார். தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் மொத்தம் 10 மில்லியன் டாலர் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். அதில் முதல் பரிசு 5 மில்லியன் டாலர் என்பது அதிசயமாய் இருக்கிறது.
தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக ஒருவர் இவ்வளவு பெரியத் தொகையை பரிசாக பெறப்போகிறார் என்றால் அவர் உண்மையில் உலகத்திலேயே மிகவும் அதிர்ஷ்டமானவராகத் தான் இருப்பார்.
Also Read | Black Fungus: மியூகோமிகோசிஸ் பாதிப்பிலிருந்து எப்படி பாதுகாப்பாக இருப்பது?
நியூ மெக்ஸிகோவின் (New Mexico) தடுப்பூசித் திட்டத்திற்கு Vax to the Max என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அந்த வலைத்தளத்தை பார்த்தாலே பரிசுத்தொகை வாங்க வேண்டும் என்ற ஆர்வம் முளைவிடும். “5,000,000 டாலர் கிராண்ட் பரிசை வெல்ல தடுப்பூசி போடுங்கள் !!!” என்று கொட்டை எழுத்தில் எழுதியுள்ளது.
ஜூன் மத்தியில் தொடங்கும் இந்தத் திட்டம் அடுத்த ஐந்து வாரங்களுக்கு, மாகாணத்தின் நான்கு சுகாதாரப் பகுதிகளிலும் வெற்றியாளர்களுக்கு, தலா 250,000 டாலர் பரிசுத் தொகையை குலுக்கல் மூலம் வழங்கும். ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில், ஒரு வெற்றியாளருக்கு 5 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும். இந்த பரிசுத் திட்டத்தில் பங்கு பெற சில நிபந்தனைகளும் உண்டு.
நியூ மெக்ஸிகோவின் பண விருதுகளுக்கு தகுதி பெற, போட்டியாளர்கள் அந்த மாகாணத்தில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும், தடுப்பூசிக்காக பதிவு செய்திருக்க வேண்டும், குறைந்தது 18 வயது பூர்த்தி ஆனவராக இருக்க வேண்டும், சிறைக்கு சென்றிருக்கக்கூடாது.
Also Read | சிக்கன் சாப்பிடுவதன் மூலம் Black Fungus பரவுகிறதா? சமூக ஊடகங்களில் வைரலாகும் போஸ்டர்!
நியூ ஜெர்சி மாகாணத்திலேயே குறைந்தது ஒரு தடுப்பூசியாவது போட்டிருக்க வேண்டும். மெகா பரிசான 5 மில்லியன் டாலரை வெல்ல, தடுப்பூசியில் (ஒன்று/இரண்டு) எத்தனை டோஸ் இருக்கிறதோ அதை போட்டவராக இருக்க வேண்டும்.
இந்த லாட்டரி அறிவிப்பால், மாகாணத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் என்ணிக்கை அதிகரிக்கும் என்று மாகாண அதிகாரிகள் நம்புகின்றனர். நியூ மெக்ஸிகோவில் வசிக்கும் 1.7 மில்லியன் மக்களில் 16 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் கிட்டத்தட்ட 56% பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்று நியூ மெக்ஸிகோ சுகாதாரத் துறை வலைத்தளம் தெரிவித்துள்ளது.
Also Read | 20% சென்னைவாசிகள் ஒரு டோஸ் கோவிட் தடுப்பூசி போட்டவர்கள்
தடுப்பூசி போடுவதற்கு பெரிய அளவிலான பரிசுகளை வழங்குவது, தடுப்பூசிகள் சிக்கலானவை என்று நினைக்க வழிவகுக்கும், இது தடுப்பூசி இயக்கத்திற்கு எதிர்மறையான விளைவை கொடுக்கக்கூடும் என்று சில நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தடுப்பூசி விகிதங்களை அதிகரிக்க விரும்பும் பல மாகாணங்கள், தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நபர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுத்தொகையையும், பணச் சலுகைகளையும் அறிவித்துள்ளன.
Also Read | History June 02: இரண்டாம் எலிசபெத்துக்கு முடிசூட்டப்பட்டது மற்றும் பல…
குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்ற மக்களுக்கு 1.5 மில்லியன் டாலர் பெரும் பரிசு உட்பட பண வெகுமதிகளை வழங்குவதாக கலிபோர்னியா அறிவித்தது. ஓஹியோ ஏற்கனவே தனது லாட்டரி ஊக்கத் திட்டத்தின் ஒரு வெற்றியாளருக்கு 1 மில்லியன் டாலர் பரிசுத்தொகையை வழங்கிவிட்டது.
கொலராடோ மற்றும் ஓரிகான் மாகாணங்களும் பரிசுத்தொகை திட்டங்களை வைத்துள்ளன. தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு மேரிலாந்து $ 100 உதவித்தொகை வழங்குகிறது.
மே மாதத்தில் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு நியூ ஜெர்சி ஒரு “shot and a beer” திட்டத்தின் மூலம் மது பாட்டிலை வழங்கியது.
Also Read | தமிழ்நாட்டில் COVID-19 பரவல் வேகம் குறைகிறது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR