காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கம்! விஜய்யின் லியோ படக்குழுவிற்கு என்ன ஆனது?

காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து 'லியோ' படத்தின் எழுத்தாளர் ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் "Bloody Earthquake" என்று பதிவிட்டுள்ளார்,  

Written by - RK Spark | Last Updated : Mar 22, 2023, 10:01 AM IST
  • விஜய் மற்றும் த்ரிஷா பாதுகாப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
  • லியோ படக்குழுவினரும் நிலநடுக்கத்தின் அதிர்வை உணர்ந்து பயந்துள்ளனர்.
  • லியோ படக்குழுவினர் தங்களது அனுபவத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கம்! விஜய்யின் லியோ படக்குழுவிற்கு என்ன ஆனது?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.  'லியோ' படக்குழுவினர் காஷ்மீரில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி இணையத்தில் வைரலானது.  இந்நிலையில் காஷ்மீர் பகுதியில் கடந்த மார்ச் 21-ம் தேதி இரவு 11 மணியளவில் 6.5 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது, இந்த நிலநடுக்கத்தால் அம்மாநில மக்கள் பெரும் பீதியடைந்தனர்.  இந்த நிலநடுக்கம் டெல்லி-என்சிஆர் பகுதி வரை 45 வினாடிகள் முதல் ஒன்றரை நிமிடங்கள் வரை நீடித்ததாகக் கூறப்படுகிறது.  துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் நிலநடுக்க அதிர்வை சந்தித்தது.  அதேசமயம் இந்த நிலநடுக்கத்தால் எந்த பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்படவில்லை.

மேலும் படிக்க | டெல்லியில் நிலநடுக்கம்! நிலநடுக்கத்தின் மையம் லாகூர்! பாதிப்பு விவரங்கள் என்ன?

காஷ்மீரில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கத்தை 'லியோ' படக்குழுவினரும் உணர்ந்து இருக்கின்றனர். படக்குழுவினர் நடுக்கத்தை அனுபவித்ததாகவும், முதலில் பலத்த காற்று என்று நினைத்ததாகவும், பின்னர்தான் நிலநடுக்கம் என்பதை உணர்ந்ததாகவும் கூறப்படுகிறது.  காஷ்மீரில் நிலநடுக்கத்தை உணர்ந்த 'லியோ' படத்தின் எழுத்தாளர் ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் "Bloody Earthquake" என்று பதிவிட்டுள்ளார், படத்தின் எழுத்தாளர் ஒருபுறம் ட்விட்டரில் பதிவிட மறுபுறம் படத்தின் தயாரிப்பாளர் குழு செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் தனது ட்விட்டர் பக்கத்தில் 'சந்திரமுகி' படத்தில் சந்திரமுகி அரண்மனைக்கு சென்ற பின்னர் வடிவேலு பயந்து நடுங்கி தன்னிலை மறந்து இருக்கும் மீம் வீடியோவுடன் படக்குழுவினர் பாதுகாப்பாக இருப்பதாக ரசிகர்களுக்கு உறுதியளித்தது.

காஷ்மீரில் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தளபதி விஜய் மற்றும் த்ரிஷா ஆகியோர் இருப்பது இவர்களது ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்து வந்தனர்.  இந்நிலையில் அவர்கள் இருவரும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் லியோ படத்தில் நடித்து வரும் பல நடிகர்கள் மற்றும் படக்குழுவிலுள்ள மற்ற உறுப்பினர்களும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் திடீரென்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தங்களுக்கு பயம் வந்ததாக தங்களது அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.  ஆனால் இப்போது எல்லாம் சரியாகிவிட்டது என்று கூறப்பட்டுள்ளது, படக்குழுவினர் தங்கியிருந்த ஹோட்டல் கட்டிடம் குலுங்கியதையடுத்து அவர்கள் ஹோட்டலின் தரைத்தள பகுதிக்கு வந்துவிட்டனர் என்றும், மேலும் சிலர் ஹோட்டலை விட்டு வெளியே சென்றுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க | இந்தியா, பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்! குறைந்தது 11 பேர் பலி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News