பொருளாதரத்தை மீட்டுக்க தனியார்மயமாக்கல் கொள்கையை கையிலெடுத்த பாகிஸ்தான்!

Pakistan Privatisation Policy Implemented: மிகவும் மோசமான நிதி பிரச்சனைகளை எதிர்கொள்டுள்ள பாகிஸ்தான் அரசு, பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் முயற்சியில் எடுத்துள்ள மிகப் பெரிய நடவடிக்கைகளில் தனியார்மயமாக்கல் முக்கியமானது

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 15, 2024, 10:33 AM IST
  • தனியார்மயமாக்கல் கொள்கையை கையில் எடுத்த பாகிஸ்தான்
  • பொருளாதார சீரழிவில் இருந்து மீளும் முயற்சியில் பாகிஸ்தான்
  • தனியார்மயமாக்கல் நடைமுறைகள் தொடங்கின
பொருளாதரத்தை மீட்டுக்க தனியார்மயமாக்கல் கொள்கையை கையிலெடுத்த பாகிஸ்தான்! title=

பொருளாதர சீர்குலைவை எதிர்கொள்ளும் பாகிஸ்தான் நாடு, தற்போது அதற்கு தீர்வாக, பொதுத்துறையை தனியார்மயமாக்கும் முயற்சியை கையில் எடுத்துள்ளது. மிகவும் மோசமான நிதி பிரச்சனைகளால் தள்ளாடிக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் அரசு, பொருளாதார சீர்திருத்தங்களை (Pakistan Economic Reforms) மேற்கொள்ளும் முயற்சியில் எடுத்துள்ள மிகப் பெரிய நடவடிக்கைகளில் ஒன்று தனியார்மயமாக்கல் என்று சொல்லப்படுகிறது.

தனியார்மயமாக்கல்

நஷ்டத்தில் இயங்கும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை (Loss-making state-owned enterprises (SOEs))தனியார் மயமாக்குவது தொடர்பான ஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய போது பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் இந்த அறிவிப்பை வெளியிட்டார். 

பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் அறிவிப்பு
நேற்று (மே மாதம் 14ம் நாள், 2024) குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் கூறுகையில், நஷ்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்கள்தான் முதலில் தனியார் மயமாக்கப்படும் என்று தெரிவித்தார். மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பொது நிறுவனங்கள் தனியாருக்கு கொடுக்கப்படமாட்டாது என்று பிரதமர் தெரிவித்தார்.  

சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) ஒரு புதிய நீண்ட கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதிக்காக (EFF) பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்த அடுத்த நாளே, பாகிஸ்தான் இந்த முக்கிய நடவடிக்கையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அரசின் அறிவிப்பின்படி, மூலோபாய நிறுவனங்கள் தவிர, மற்ற அனைத்து அரசு நிறுவனங்களும் தனியார்மயமாக்கப்படும்.

மேலும் படிக்க | இந்தியாவுடன் வர்த்தகத்தை விரும்பும் பாகிஸ்தான் வர்த்தகர்கள்.. வெளியுறவு அமைச்சர் தகவல்!

மூலோபாய பொதுத்துறை நிறுவனங்கள் என்றால் என்ன?

பாதுகாப்பு உபகரணங்களுக்கான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள், பாதுகாப்புக்கான விமானங்கள் மற்றும் போர்கப்பல்கள், 
அணு ஆற்றல், விவசாயம் மற்றும் மருத்துவம், இரயில்வே போன்ற முக்கியமான துறை தொடர்பான நிறுவனங்களை மூலோபாய நிறுவனங்கள் என்று சொல்வார்கள். 

பாகிஸ்தான் பிரதமர் கூட்டத்தில், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தவை தவிர, மற்ற அனைத்து நிறுவனங்களும் தனியார்மயமாக்கப்படும் என்று கூறியதாக 'ஜியோ நியூஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.  

தனியார்மயமாக்குவது, தாரளமயமாக்குவது என்ற அரசின் முடிவு தொடர்பாக பேசிய பிரதமர் ஷெரீஃப், அரசின் வேலை வியாபாரம் செய்வது அல்ல, வணிகம் மற்றும் முதலீட்டுக்கு சாதகமான சூழலை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என்று கூறினார். 
தனியார்மயமாக்கும் முடிவை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், தனியார்மயமாக்கல் ஆணையத்துடன் ஒத்துழைக்க வேண்டுமெ எனவும் அவர் அறிவுறுத்தினார்.

அரசின் 51 சதவிகித பங்குகள் வைத்திருக்கும் நிறுவனம் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகும். தனியார்மயமாக்கல் என்பது, உரிமை, நிர்வாகம் மற்றும் கட்டுப்பட்டை, பொதுத்துறையில் இருந்து தனியார்த்துறைக்கு மாற்றுவதாகும். எனவே, தனியார்மயமாக்கும் செயல்முறை வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்பதன் அவசியத்தை வலியுறுத்திய பாகிஸ்தான் பிரதமர், பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) இன் தனியார்மயமாக்கல் செயல்முறை, ஏலம் மற்றும் பிற முக்கிய படிகள் பற்றிய முழுமையான தகவல்கள் தொலைக்காட்சியில் வெளிப்படையாக வழங்கப்படும் என்று கூறினார். நஷ்டத்தில் இயங்கும் அரசு விமான நிறுவனமான பிஐஏவை தனியார்மயமாக்கும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லாபம் ஈட்டும் நிறுவனங்களும் இந்த வரம்பிற்குள் வருமா?
நஷ்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களை மட்டும் தனியார் மயமாக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது லாபம் ஈட்டும் பொது நிறுவனங்களும் தனியார்மயமாக்கப்படும் என்று தெரிகிறது.

மேலும் படிக்க | கோவையில் பொதுமக்களை ஈர்த்த பஞ்சாபி உணவுத் திருவிழா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News