இமெயில் விவகாரத்தில் ஹிலாரிக்கு எதிராக நடவடிக்கை இல்லை எப்பிஐ அறிவிப்பு.
அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை (நவம்பர் 8) நடக்க உள்ளது. இந்த தேர்தலில் குடியசு கட்சி வேட்பாளர் டொனால் டிரம்பப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்ன் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது
இந்நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஹிலாரி கிளின்டன் ஏற்கனவே வெளியுறவு அமைச்சர் பதவி வகித்திருந்தார். அப்போது தன் தனிப்பட்ட இ-மெயில் முகவரியை அரசு பணிக்காக பயன்படுத்தியதாக ஹிலாரி மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும் சர்வரில் இருந்து தகவல்களை அழித்ததாகவும் கூறப்பட்டது. இந்த இ-மெயில் விவகாரம் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க புலனாய்வு அமைப்பு தற்போது முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. அந்த அமைப்பு இ-மெயில் விவகாரத்தில் ஹிலாரிக்கு எதிராக ஆதாரம் இல்லை என கூறியுள்ளது.