வெப்பத்தில் தகிக்கும் ஆசிய நாடுகள்... வெப்ப அலை நீடிக்கும் என எச்சரிக்கை..!!

Heat Wave in Asia: தற்போது ஆசியா முழுவதும் கடும் வெப்பத்தின் பிடியில் சிக்கியுள்ளது. கொளுத்தும் வெயிலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பலரது வாழ்வாதாரத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 1, 2024, 04:51 PM IST
  • கடும் வெப்பம் காரணமாக வங்கதேசத்தில், இது வரை இல்லாத அளவு கடும் கோடை நிலவுகிறது.
  • ஜப்பான், மியான்மர் ஆகிய நாடுகளிலும் வெப்ப அலை.
  • இந்தியாவின் பல பகுதிகளிலும் கடும் வெப்பம் நிலவுகிறது.
வெப்பத்தில் தகிக்கும் ஆசிய நாடுகள்... வெப்ப அலை நீடிக்கும் என எச்சரிக்கை..!! title=

Heat Wave in Asia: தற்போது ஆசிய நாடுகளில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் கடுமையான வெப்ப அலை வீசுகிறது. இதனால் வெப்பம் தொடர்பான நோய்களின் தாக்கம் அதிகரித்துள்ளதோடு, கடும் வெப்பத்தினால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் இருந்து பிலிப்பைன்ஸ் வரை கடுமையான வெப்பம் பரவியது. 

வானிலை ஆய்வாளர் மாக்சிமிலியானோ ஹெர்ரேரா தனது X பதிவில், ஆசியா முழுவதும் வெப்பநிலை பல முந்தைய சாதனைகளை முறியடித்து, உச்ச அளவை எட்டியுள்ளது எனவும் இது உலக காலநிலை வரலாற்றில் இதுவரை கண்டிராத மிக அளவிலான கடும் கோடையாக மாறியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஆசியாவில் ஏப்ரல் கடைசி வாரத்தில் கடுமையான வெப்பம் காணப்பட்டது என்றும், இந்த நிலை மே மாதத்தின் ஆரம்ப நாட்களிலும் தொடர வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. 

தெற்காசியாவின் பல பகுதிகளில் மார்ச் மாதத்திலிருந்து வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவே (Summer) இருந்து வருகிறது. 14 மில்லியன் மக்கள் வசிக்கும் பிலிப்பைன்ஸின் மணிலாவில் கடந்த சனிக்கிழமை 38.8 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. பங்களாதேஷ், இந்தியா மற்றும் சீனாவிலும் கடுமையான கோடை நிலவுகிறது.

தற்போது நிலவும் கடும் வெப்பம் காரணமாக வங்கதேசத்தில், இது வரை இல்லாத அளவு கடும் கோடை நிலவுகிறது. ஏப்ரல் கடைசி வாரத்தில், வங்கதேசத்தில் வெப்பம் 43 டிகிரி செல்சியஸை எட்டியதால் பள்ளிகள் மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. வங்கதேசத்தில் செவ்வாய்க்கிழமை அதிக அளவாக வெப்பநிலை 43.8 C ஆக இருந்தது. சீனாவிலும் இதே நிலைதான். தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தில் ஏப்ரல் மாதத்தில் நாட்டின் அதிகபட்ச வெப்பநிலை 43.4 செல்சியஸ் ஆகும். ஹைனான் மாகாணத்தில் வெப்பநிலை 42.8 செல்சியஸை எட்டியது. இது ஹைனானில் இதுவரை பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச வெப்பநிலையாகும்.

மேலும் படிக்க | இந்தியா - ஈரான் இடையே வரலாற்று சிறப்பு மிக்க சபஹர் துறைமுக ஒப்பந்தம்... மிக விரைவில்!

ஜப்பானில் தெற்கிலிருந்து வடக்கு வரை வரலாறு காணாத வகையில் கடும் வெப்பநிலை காணப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் இது வரை இல்லாத சாதனை அளவாக லாவோஸில் வெள்ளிக்கிழமை வெப்பநிலை பதிவாகியது. நகோனில் வெப்பநிலை 43.2 C ஐ எட்டியது. மியான்மரில் வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸ் ஆக உயர்ந்துள்ளது. பிலிப்பைன்ஸில் உள்ள மணிலா விரிகுடாவில் உள்ள சாங்லி பாயிண்டிலும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 30.2 செல்சியஸ் பதிவாகியுள்ளது, இது நாட்டின் வரலாற்றில் அதிக இரவு வெப்பநிலையாகும். இதனால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

தாய்லாந்திலும் கடும் வெப்பம் நிலவி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை பல நகரங்கள் இது வரை இல்லாத அளவு உச்சத்தை எட்டின. வியட்நாமில் ஏப்ரல் மாதத்திற்கான அதிகபட்ச வெப்பநிலை செவ்வாய்கிழமை பதிவாகியுள்ளது. துவாங் டுவாங்கில் வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸ் என்ற அளவை எட்டியது.

இந்தியாவின் பல பகுதிகளிலும் கடும் வெப்பம் நிலவுகிறது. குறிப்பாக கொல்கத்தாவில் ஏப்ரல் மாதத்தின் மிக நீண்ட கால வெப்ப அலை உணரப்பட்டது. கொல்கத்தா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மே 2 ஆம் தேதி வரை கடும் வெப்ப அலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வுத் துறை சிப்பு நிற எச்சரிக்கை நிலையை அறிவித்தது. வாஷிங்டன் போஸ்ட் மற்றும் கார்பன் பிளானின் காலநிலை தரவுகளின் பகுப்பாய்வில், 2030 ஆம் ஆண்டில் இந்தியா உலகிலேயே அதிக வெப்பநிலைக்கு ஆளாகக்கூடும் நாடாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

அரிசோனா பல்கலைக்கழகத்தின் வானிலை பேராசிரியர் கிம் வுட், கடும் வெப்பத்திற்கான முக்கிய காரணம் வழக்கத்திற்கு மாறாக சூடான கடல் நீர் என்று கூறுகிறார். சில இடங்களில் வெப்பம் சிறிது நேரம் குறையலாம் ஆனால் வெப்பநிலை சராசரியை விட அதிகமாக இருக்கும் என்று அவர் கூறுகிறார். மே மாத மத்தியில் வெப்பம் மேலும் அதிகரிக்கலாம் என அவர் மேலும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க | ஆஹா... மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் வென்ற 60 வயது பெண் - யார் இந்த அழகி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News