ஐரோப்பிய யூனியன் பாராளுமன்றம், ஒரு முக்கிய மைல்கல்லாக, எலக்ட்ரானிக் கேஜெட்டுகள் தொடர்பாக புதிய விதிகளை அங்கீகரித்துள்ளது. இந்த புதிய விதிகள் 2024 க்குள் மொபைல் போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் கேமராக்கள் போன்ற மின்னணு கேஜெட்டுகளுக்கு, உலகளாவிய சார்ஜிங் போர்ட் அறிமுகப்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது. இந்த விதிகளுக்கு எதிராக 13 வாக்குகளும், ஆதரவாக 602 வாக்குகள் கிடைத்துள்ளது. இ-ரீடர்கள், இயர்பட்கள் மற்றும் பிற மின்னணு கேஜெட்டுகளும் ஒரே மாதிரியான சார்ஜிங் போர்ட்டைக் கொண்டிருப்பதற்கு இந்த விதி வழி வகுக்கிறது.
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு, ஆண்ட்ராய்டு அடிப்படையிலான சாதனங்களால் பயன்படுத்தப்படும் USB-C சார்ஜர்களை அனைத்து விதமான மின்னணு கேட்ஜெட்டுகளுக்கும் ஏற்ற வகையில் மாற்றுவதற்கான முந்தைய ஒப்பந்தத்தை உறுதிப்படுத்துகிறது. சுருக்கமாகச் சொன்னால், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மின்னணு சாதனங்களும் ஒரே சார்ஜிங் போர்ட்டைக் கொண்டிருக்க வேண்டும்.
இந்த நடவடிக்கை மற்ற மின்னணு நிறுவனங்களை விட ஆப்பிளை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன்கள் லைட்டனிங் கேபிளில் இருந்து சார்ஜ் செய்யப்படுகின்றன, ஆண்ட்ராய்டு சார்ந்த சாதனங்கள் USB-C சார்ஜர்களை கொண்டு சார்ஜ் செய்யப்படுகின்றன. ஆப்பிள் அதன் தனியுரிம MagSafe சார்ஜிங் தொழில்நுட்பத்தை மேலும் பல சாதனங்களில் பயன்படுத்துகிறது. சாதனங்களை மாற்றும் போதெல்லாம் வெவ்வேறு சார்ஜர்களுக்கு மாற வேண்டிய நிலை உள்ளது என்று, ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | மத்திய அரசு அதிரடி; PFI அமைப்பு மீது 5 ஆண்டு கால தடை!
குபெர்டினோவை தளமாகக் கொண்ட நிறுவனம், நுகர்வோரை தனது தயாரிப்புகளை வாங்க கட்டாயப்படுத்தும் வகையில் ஐ போன் செயல்படுவதாக குற்றம் சாட்டியது. ஆப்பிள் பேட்டரி சார்ஜர் இல்லாமல் ஐபோன்களை விற்கும் நிலையில், சார்ஜர்களை தனியாக வாங்கும் நிலை நுகர்வொருக்கு ஏற்படுகிறது. வல்லுநர்கள் இந்த நடைமுறையை 'tie-sale' என்று வகைபடுத்துகின்றனர். ஆப்பிள் தனது பிரத்யேக உற்பத்தியின் இரண்டாவது தயாரிப்பை வாங்குவதற்கு நுகர்வோரை கட்டாயப்படுத்துவது தவறான மற்றும் சட்டவிரோத வணிக நடைமுறையாகும்.
செப்டம்பர் மாதம், பிரேசில் அரசாங்கம் ஆப்பிள் நிறுவனத்திற்கு $2.38 மில்லியன் அபராதம் விதித்ததோடு, தென் அமெரிக்க நாட்டில் பேட்டரி சார்ஜர் இல்லாமல் ஐபோன்களை விற்பனை செய்வதை நிறுத்துமாறு நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.
மேலும் படிக்க | அசத்தும் இந்திய ரயில்வே; வாட்ஸ்அப்பில் PNR, ரயிலின் நிலை அறிந்து கொள்ளும் வசதி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ