நியூயார்க்: உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றின் ஒரு நாள் எண்ணிக்கை புதன்கிழமை முதல் தடவையாக 500,000 க்கும் அதிகமாக உயர்ந்தது. இது வடக்கில் உள்ள நாடுகளில் ஒரே நாளில் இதுவரை ஏற்பட்டுள்ள மிக அதிக அளவிலான அதிகரிப்பாகும்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் தடவையாக உலகளவில் ஒரே நாளில் 400,000 பேர் புதிதாக பாதிக்கப்பட்ட நிலையில், உலகளாவிய தினசரி COVID-19 தொற்றின் எண்ணிக்கை இரண்டு வாரங்களுக்குள் கிட்டத்தட்ட 25% அதிகரித்துள்ளன. பெரும்பாலான மேற்கத்திய நாடுகளும் லத்தீன் அமெரிக்காவின் சில பகுதிகளும் கடந்த சில வாரங்களில் மிக உயர்ந்த ஒற்றை நாள் எழுச்சிகளைப் பதிவு செய்துள்ளன. பல அரசாங்கங்கள், அமெரிக்காவைத் தவிர்த்து, வைரஸின் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர வலுவான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன.
உலகளாவிய கொரோனா வைரஸ் (Corona Virus) எண்ணிக்கை 44.7 மில்லியன் ஆகும். இந்த வைரசால் இதுவரை சுமார் 1.17 மில்லியன் மக்க்கள் இறந்துள்ளனர்.
ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய பகுதிகளின் எண்ணிக்கை உலகளாவிய தொற்று எண்ணிக்கையில் 66% ஆகும். உலகளாவிய இறப்புகளில் 76% க்கும் அதிகமானோர் இந்தப் பகுதிகளை சேர்ந்தவர்கள்.
ராய்ட்டர்ஸ் கணக்கின்படி, ஐரோப்பாவின் புதிய தினசரி நோய்த்தொற்றுகள் கடந்த இரண்டு வாரங்களில் இரு மடங்காக அதிகரித்துள்ளன. இப்பகுதியில் இதுவரை 9.5 மில்லியன் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 261,000 பேர் இறந்துள்ளனர்.
பிரான்ஸ் (France) ஞாயிற்றுக்கிழமை முதல் முறையாக 50,000 க்கும் மேற்பட்ட ஒரு நாள் தொற்று எண்ணிக்கையை பதிவுசெய்தது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான புதுப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால், இந்த மாதத்தில் யூரோ-மண்டல பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளன. இந்த கட்டுப்பாடுகள், கூட்டணியின் மேலாதிக்க சேவைத் துறையில் பல வணிகங்களை நடவடிக்கைகளை குறைக்க கட்டாயப்படுத்தியது.
8.9 மில்லியன் நோய்த்தொற்றுகள் மற்றும் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து சுமார் 228,000 இறப்புகளுடன் உலகளாவிய கொரோனா வைரஸின் எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
செவ்வாயன்று அதிபர் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒரே நாளில் பலர் தொற்றால் பாதிக்கப்பட்டதைக் காண முடிந்தது. அமெரிக்காவில் ஒரே நாளில் 84,169 பேர் புதிதாக பாதிக்கப்பட்டதால், தொற்றுக்கான இதுவரையிலான தினசரி சாதனை அளவு முறியடிக்கப்பட்டது.
ALSO READ:கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் அனைவருக்கும் COVID தடுப்பூசி...உண்மை என்ன?
ராய்ட்டர்ஸ் பகுப்பாய்வின்படி, அமெரிக்காவில் ஒரு நாளைக்கு சராசரியாக 75,000 பேர் தொற்றால் பாதிக்கப்படு வருகிறார்கள். மேலும் அனைத்து அமெரிக்கர்களும் முகக்கவசம் அணியாவிட்டால் பிப்ரவரி மாதத்திற்குள் COVID-19 ஆல் இறந்தவர்களின் எண்ணிக்கை 500,000 ஐத் தாண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
ராய்ட்டர்ஸ் கணக்கின்படி, உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு மற்றும் மோசமான பாதிப்புக்குள்ளான இரண்டாவது நாடான இந்தியாவில் (India) சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 48,000 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் 1.3 பில்லியன் மக்களுக்கு தடுப்பு மருந்தை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். தடுப்பு மருந்துகள் கிடைத்தவுடன் அதற்கான செயல்முறையை விரைவுபடுத்த அனைத்து அரசு மற்றும் தனியார் சுகாதார பணியாளர்களின் தரவுத்தளத்தை நாடு தயாரித்து வருகிறது.
மத்திய கிழக்கில் COVID-19 தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான ஈரானில் ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் ஒருவர் இறக்கிறார் என்று அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
ALSO READ: அனைத்து இந்தியர்களும் இலவச கொரோனா வைரஸ் தடுப்பூசி கிடைக்கும்: மத்திய அமைச்சர்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR