இலங்கை பொடுஜானா கட்சி 2019 ஜனாதிபதித் தேர்தலில் தனது வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச பெரும்பான்மையைப் பெற்று வெற்றி!!
இலங்கையில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்காக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் மஹிந்தா ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே, ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகன் சஜித் பிரேமதாசா ஆகியோர் உள்ளிட்ட 35 பேர் இத்தேர்தலில் போட்டியிட்டனர்.
வாக்குப்பதிவு நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்த நிலையில், 81.52 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 355 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இந்நிலையில், இலங்கை பொடுஜானா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். இதை தொடர்ந்து தற்போது, இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய கட்சி 50.55 சதவீதம் ( 36லட்சத்து 79 ஆயிரத்து) ஓட்டுகளும், புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளரான சஜித் பிரேமதாச 43.49 சதவீதம் ஓட்டுகளும் பெற்றுள்ளனர். இலங்கை பொடுஜானா கட்சி 2019 ஜனாதிபதித் தேர்தலில் தனது வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றுள்ளதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
Sajith Premadasa concedes Sri Lanka presidential poll to Gotabaya Rajapaksa: AFP news agency #SrilankaPresidentElection2019 https://t.co/n2e9l977Iw
— ANI (@ANI) November 17, 2019
மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக அறிவித்த சஜித் பிரேமதாச, இலங்கையின் புதிய அதிபராக வெற்றி பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவைப் பாராட்டுகிறேன் என்றும் கூறியுள்ளார். அதிபர் தேர்தலில் இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் அடிப்படையில் 50% வாக்குகளை எட்டி முன்னிலையில் உள்ளார். கோத்தபயாவின் வெற்றியை அமைதியாக கொண்டாடுமாறு தொண்டர்களுக்கு ஜேவிபி கட்சி அறிவுறுத்தியுள்ளது. மேலும், அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்ட சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசிய கட்சி துணை தலைவர் பதவியில் இருந்து விலகினார்.