பயங்கரவாதிகளுக்கு பாக்., பயிற்சி அளித்ததை ஒப்புக் கொண்ட இம்ரான்!

பயங்கரவாதிகள் பாக்.,க்கு எதிராக திரும்புவதற்கு அமெரிக்கா தான் காரணம் என பாக்., பிரதமர் இம்ரான் கான் குற்றம்சாட்டு!!

Updated: Sep 13, 2019, 11:23 AM IST
பயங்கரவாதிகளுக்கு பாக்., பயிற்சி அளித்ததை ஒப்புக் கொண்ட இம்ரான்!

பயங்கரவாதிகள் பாக்.,க்கு எதிராக திரும்புவதற்கு அமெரிக்கா தான் காரணம் என பாக்., பிரதமர் இம்ரான் கான் குற்றம்சாட்டு!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவு ரத்து செய்யது, அம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது மத்திய அரசு. அந்த மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதை தொடர்ந்து, தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலம் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றது. 

இந்நிலையில், அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் நிதியுதவியுடன் நாடு பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்ததாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெள்ளிக்கிழமை ஒப்புக் கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில்; 1980-களில் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து இருந்ததற்காக சோவியத்திற்கு எதிராக புனித போர் நடத்த நாங்கள் முஜாஹிதீன்களுக்கு பயிற்சி அளித்து வந்தோம். இவர்களுக்கு பாக்., பயிற்சி அளிக்க அமெரிக்காவின் CIA நிதியுதவி அளித்து வந்தது. தற்போது நூற்றாண்டுகள் கடந்த பிறகு, அமெரிக்கர்கள் ஆப்கானிஸ்தானிற்குள் சென்று விட்டனர்.

தற்போது,  பாகிஸ்தானில் உள்ள அதே குழுக்களை பயங்கரவாதிகள் என்று, ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்துவதால் அமெரிக்கா கூறுகிறது. அமெரிக்க படைகள் ஆப்கானில் உள்ளதால் பயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா செயல்படுக்கிறது. இதனால் பயங்கரவாதிகளின் கோபம் பாக்., பக்கம் திரும்பி உள்ளது. 

பயங்கரவாதத்தால் பாகிஸ்தான் 70,000 பேரையும், 100 மில்லியன் டாலர் பொருளாதாரத்தையும் இழந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவால் வெல்ல முடியாததால் பழியை பாக்., மீது சுமத்துகிறது அமெரிக்கா. ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் விலகி இருக்கவே பாக்., நினைக்கிறது" என அவர் தெரிவித்துள்ளார்.