பாகிஸ்தானில் 19 வயது பெண்ணை காதல் திருமணம் செய்த 70 வயது 'வாலிபர்' !

ஒரு பாகிஸ்தானிய யூடியூபர் சையத் பாசித் அலி சமீபத்தில் பாகிஸ்தானி அபூர்வ காதல் ஜோடியின் காதல் கதையை அமபலப்படுத்திய நிலையில், சமூக ஊடகத்தில் அந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 18, 2022, 07:07 PM IST
  • காதல் வயது பார்த்து வருவதில்லை. அது உணர்வு பூர்வமானது.
  • காலை நடைப்பயிற்சியின் போது, பூத்த காதல்.
  • முன்னதாக, 18 வயது சிறுமி, 55 வயது நபரை திருமணம் செய்த கதையை யூடியூபர் பகிர்ந்துள்ளார்.
பாகிஸ்தானில் 19 வயது பெண்ணை காதல் திருமணம் செய்த 70 வயது 'வாலிபர்' ! title=

பாகிஸ்தானில் மிக பெரிய அளவில் வயது வித்தியாசம்  இருந்தபோதிலும் திருமணம் செய்து கொண்ட பாகிஸ்தான் ஜோடியின் காதல் கதை மிகவும் வைரலாகியுள்ளது.  காதலுக்கு கண் இல்லை என்பது மீண்டும் நிரூபனம் ஆகியுள்ளது. ஒரு பாகிஸ்தானிய யூடியூபர் சையத் பாசித் அலி சமீபத்தில் இந்த ஜோடியின் காதல் கதையை வெளிப்படுத்தினார். அவர்கள் லியாகத் அலி, வயது 70 மற்றும் ஷுமைலா அலி, 19 என்ற காதல் ஜோடி ஆவர். இந்த தகவல் சமூக ஊடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. காலை நடைப்பயிற்சியின் போது, பூத்த காதல் காரணமாக, ​​ஷுமைலாவும்  லியாகத் அலியும் திருமணம் செய்துகொண்டனர்.

சில மாதங்களுக்கு முன்பு, காலை நடைப்பயிற்சியின் போது ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்ட 19 வயது பெண்ணான  ஷுமைலா மற்றும் 70 வயது 'பாபா'வின் தனித்துவமான காதல் கதையை யூட்யூபர் பகிர்ந்து கொண்டார். லாகூரில் தினசரி காலை நடைப்பயிற்சியின் போது தனது மனைவி ஷுமைலாவை சந்தித்ததாக லியாகத் அலி கூறினார். ஒரு நாள் லியாகத் ஷுமைலாவின் பின்னால் ஜாகிங் செய்யும் போது ஒரு பாடலை முணுமுணுக்க ஆரம்பித்தபோது காதல் துளி விடத் தொடங்கியது.

"காதல் வயது பார்த்து வருவதில்லை. அது உணர்வு பூர்வமானது," என்று ஷுமைலா கூறினார். அவர்களின் திருமணத்திற்கு அவரது பெற்றோருக்கு ஏதேனும் ஆட்சேபனை இருக்கிறதா என்று கேட்டதற்கு, வித்தியாசமான இந்த காதல் கதையின் நாயகியான  19 வயது சிறுமி அது குறித்து கூறுகையில், : "என் பெற்றோர் சிறிது காலம் எதிர்த்தனர். ஆனால்  நாங்கள் இருவரும் அவர்களை சமாதானப்படுத்தி விட்டோம்" என்றார். 

மேலும் படிக்க |  Viral News: இவரது மூக்கு கொஞ்சம் அதிக நீநீநீநீளம் தான்! வியக்கும் நெட்டிசன்கள்!

அதிக வயது வித்தியாசம் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா வேண்டாமா என்று சையத் கேட்டதற்கு, லியாகத் கூறினார்: " வயதானவர் அல்லது இளைஞர் என்பது அவரவர் மனதை பொறுத்தது. சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்ட எவரும் திருமணம் செய்து கொள்ளலாம்." திருமணத்தில் எல்லாவற்றுக்கும் தனிப்பட்ட வகையில் கண்ணியம் மற்றும் மரியாதையை கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவரது மனைவியான 19 வயது  ஷுமைலா கூறினார்.

முன்னதாக, பாகிஸ்தானில் 18 வயது சிறுமி, 55 வயது நபரை திருமணம் செய்த கதையை யூடியூபர் பகிர்ந்துள்ளார். அதுவும் மிகவும் வைரலாகியது. ஒரு பாபி தியோல் பாடல் தங்களை இணைத்ததாக சையத்திடம் அந்த தம்பதியினர் தெரிவித்தனர். முஸ்கன் என்ற 18 வயதுப் பெண், 55 வயதான ஃபரூக் அகமதுவை மணந்தார். பின்னர் இசையில் அவர்கள் கொண்டிருந்த ஆர்வத்தின் காரணமாக இருவரும் காதலித்தனர்.

மேலும் படிக்க | Viral News: இலக்கை எட்டாத பணியாளரின் மண்டையை உடைத்த மேலதிகாரி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News